• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகள் திருமணம் - முன்னாள் மனைவிக்கு முத்தமிட்ட சூப்பர் ஸ்டார்

சினிமா

அமீர்கான் தனது முன்னாள் மனைவிக்கு முத்தமிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர்கான். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான லால் சிங் சந்தா திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில்

சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகுவதாகவும், அதே நேரத்தில் இரண்டாவது மனைவி கிரன் ராவ்வை பிரிவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், அவரது மகள் ஈரா கான் திருமணம் மும்பையில் நடைபெற்றது.

தில் அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தா, அவரது மகன் ஜுனைத் கான் கலந்துகொண்டனர். மேலும், இரண்டாவது மனைவி கிரண் ராவ், அவர்களது மகன் ஆசாத் ராவ் கான் ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது முன்னாள் மனைவி கிரண், மகன் ஆசாத்துடன் பேசிக்கொண்டிருந்த அமீர்கான் திடீரென கிரணின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.

தொடர்ந்து, தனது அருகில் நிற்க வைத்து போட்டோ எடுத்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 

Leave a Reply