• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசன் வரிகள் புரியாமல் தவித்த இயக்குனர்

சினிமா

என்ன கவிஞரே இது... 8 அடுக்கு மாளிகை படத்திலே இல்லையே! கண்ணதாசன் வரிகள் புரியாமல் தவித்த இயக்குனர்

1962-ம் ஆண்டு இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாத காணிக்கை. ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு, கமல்ஹாசன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

க்ளாசிக் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து கவியரசர் என்று பெயரெடுத்து கண்ணதாசன் பாத காணிக்கை படத்திற்காக எழுதிய ஒரு பாட்டு இயக்குனருக்கு புரியாமல் இருந்ததும், அதற்கு கண்ணதாசன் விளக்கம் கொடுத்ததும் இதுவரை யாரும் அறியாத ஒரு தகவல்.

1962-ம் ஆண்டு இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாத காணிக்கை. ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு, கமல்ஹாசன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்திற்கு அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார். ‘

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில். பாடல்கள் அனைத்தும் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக 8 அடுக்கு மாளிக்கையில் என்ற பாடல் ரசிகர்கள் கொண்டாடிய பாடலாக இருக்கிறது. அதேபோல் துக்க வீடுகளில் இந்த பாடல் ஒளிக்காமல் இருக்காது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சோகத்தின் உச்சத்தில் இருந்து எழுதப்பட்ட இந்த பாடலின் வாரிகள் புரியாமல் இயக்குனர் கே.சங்கர் குழம்பியுள்ளார்.

இந்த படத்தின் பாடல் தொடர்பான கம்போசிங்கில் உட்காரும்போது, ஜெமினி கணேசன் சாவித்ரியை காதலிக்கும் நிலையில், அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி விஜயகுமாரியை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். அந்த சூழ்நிலையில் சாவித்ரி பாடுவது போன்ற ஒரு பாடல் என்று சொன்னவுடன், கவியரசர் கண்ணதாசன் எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு எட்டடுக்கு மாளிக்கையில் ஏற்றிவைத்த என் தலைவன் என்று வரிகளை கொடுக்கிறார்.

இதற்கு இடையில் ஏதோ சந்தேகம் கேட்க, எழுந்த இயக்குனர் கே.சங்கர், பிறகு ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுகிறார் அதன்பிறகு பாடல் பதிவு நடைபெற்று படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பி.சுசிலா குரலில் வெளியான எட்டடுக்கு மாளிக்கை பாடல் பலரின் மனதை கவர்ந்தது. சில நாட்கள் கழித்து படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் உணவு நேரத்தில் கண்ணதாசனை சந்திக்கிறார் கே.சங்கர்.

அப்போது படத்தில் ஜெமினிகணேசன் பணக்காரர் தான் ஆனால் அவரிடம் 8 அடுக்கு மாளிக்கை இல்லை. இந்த பாடலில் 8 அடுக்கு மாளிக்கை என்று ஏன் எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். இதற்கு விளக்கம் அளித்த கண்ணதாசன், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கையால் 8 ஜான் அளவு தான் உடல் இருக்கும். இதுதான் எட்டு அடுக்கு மாளிகை என்று சொல்ல, கே.சங்கர் திகைத்து போயுள்ளார்.
 

Leave a Reply