• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜியிடம் பாவ்லா நடிப்பெல்லாம் இருக்காது

சினிமா

சிவாஜி அடிப்பது போன்ற காட்சிகளில்  நடிக்கும் போது உடன் நடிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .சிவாஜியிடம் பாவ்லா நடிப்பெல்லாம் இருக்காது .இது போன்ற காட்சிகளை எடுப்பதற்கு முன்பே சிவாஜி உடன் நடிப்பவர்களிடம் அந்தக் காட்சிகள் எப்படி நடிக்க வேண்டும், நான் அடிக்கும்போது நீங்கள் எவ்வாறு விலகிக் கொள்ள வேண்டும் என்று விபரமாகவே சொல்லிவிட்டே அந்தக் காட்சியில் நடிக்க தொடங்குவார். படத்தில் சிவாஜி அடிப்பதை பார்த்தால் உண்மையாகவே அடித்து விட்டாரோ என்று நினைக்க தோன்றும். அந்த காலத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகர் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்களாக இருந்ததால் இதுபோன்ற படத்தில் இடம் பெற்ற காட்சிகள்
தத்ருபமாக அமைந்து இருக்கும்.என்னதான் உஷாராக இருந்தாலும் அதையும் மீறி சில சமயங்களில் அடிகள் நிஜமாகவே உடம்பின் மீது விழுந்துவிட்ட பல சம்பவங்களும் இருந்துள்ளன.
அப்படி நடைபெற்ற சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் மிக முக்கியமானவை. இந்த மூன்று சம்பவங்களில் மூன்று முக்கிய பிரபல கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்கள் பத்மினி சாவித்திரி சரோஜாதேவி. இந்த மூன்று சம்பவங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். 
தமிழ் திரையுலகை தாண்டியும் இந்தியா சினிமாவிலும் முப்பெரும் கதாநாயகிகளாக பெரும் அந்தஸ்துடன் வாழ்ந்தவர்கள் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி இந்தியா திரையுலகில் கொண்டாடபட்டவர்கள்.
அந்த நிலையில் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் முதலாவது கதாநாயகியாக பத்மினி அவர்கள் எதிர்பாராதது திரைப்படத்தில் சிவாஜிகணேசன் காதலியாக பத்மினி நடித்திருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிவாஜியின் பத்மினி சிவாஜிக்கு சித்தியாக மாறிவிடுவார்.ஆதலால் வருந்தும் சிவாஜி ஒரு கட்டத்தில் உணர்ச்சிகரமாகி 
பத்மினியை தொடப் போவார்.முன்பு காதலியாக இருந்தாலும் இப்போது பத்மினி அன்னை ஸ்தானத்தில் .பண்பாடு மாறக்கூடாது என்பதற்காக சிவாஜியின் அந்த செயலை கண்டு பத்மினி சிவாஜி அறைந்து தள்ளுவார். இயக்குனர் கட் சொன்ன பின்பும் அடங்காத வேகத்தில் பத்மினி சிவாஜியை அடித்து தள்ளுவார். பலமான அடிகள் சிவாஜியின் மீது விழுந்து விட்டன
பத்மினியின் இந்த செயலால் சிவாஜிக்கு காய்ச்சலே வந்துவிட்டது. 
இதைப் பற்றி பத்மினி பல சமயங்களில் கூறி வருத்தப்பட்டாலும் சிவாஜி அதைப்பற்றி தவறாக நினைக்கவில்லை.
சிவாஜி பொருத்தவரை எந்த ஒரு காட்சியும் தத்ரூபமாக நன்றாக வர வேண்டும் என்பதுதான். 
அதே போல் சிவாஜி கணேசன்-பத்மினி இணைந்து நடித்த மற்றோரு படமான விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி கண்ணத்தில் சாதரணமாக அடிக்க வேண்டும். 

 சிவாஜி கணேசன் பத்மினி கண்ணத்தில் ஓங்கி ஒரு அரை விட்ட போது பத்மினி காதில் இருந்த கம்பல் தோடு கழண்டு
பக்கத்து அறையில் போய் விழுந்துவிட்டது. காட்சியும் தத்ரூபமாக அமைந்துவிட்டது .
அந்தக் காட்சி நன்றாக வந்ததால் எல்லோருக்கும் திருப்தி. அடுத்த ஷாட்டுக்காக பத்மினியை தேடிய போது 
அவர் ஒரு அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
மேலும் அந்த காட்சியில் தொடர்ந்து நடிக்க ஏ. பி. நாகராஜன் சொல்ல அப்போது பத்மினி சொன்னார். 
அவர் அடித்த அடியால் என்னால் வலி தாங்க முடியவில்லை.
என்னை கொஞ்ச நேரம் அழவிடுங்கள் என்று அழுகைக்கு அவகாசம் கேட்டு கொண்டு பத்மினி முழுமையாக அழுத பிறகே மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. விளையாட்டுப் பிழையில் இப்போது அந்த காட்சியை பார்த்தாலும் கம்மல் தெறித்து விழுவது தெரியும் .
2) சிவாஜி கணேசன்-சாவித்திரி இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்றான அன்னையின் ஆணை படத்தில்  சிவாஜி கணேசன் அவர்கள் படத்தின் கதையின் படி சாவித்திரியின் அப்பாவாக வரும் ரங்காராவை பழிவாங்கும் கேரக்டர்.  தனது தந்தையை பலி வாங்குபவன் என்று சாவித்திரி தெறிந்து கொண்ட பிறகு சாவித்திரி சிவாஜி கணேசன் மார்பு சதையை சாவித்திரி கையால் புறண்டிய போது சாவித்திரியின் கை விரலில் உள்ள கூர்மையான நெகங்கள் உண்மையாகவே சிவாஜி கணேசனின் மார்பு சதையை கிழித்து விட்டதாம் .படத்தில் இந்த காட்சியை பார்க்கும் போது நாம் தெரிந்து கொள்ளலாம். 
அதன் பிறகு அந்த வலியையும், ரத்த காயத்தையும் அந்த காயங்களை தண்ணீரில் கழுவி துண்டால் துடைத்து அதன் பிறகு அந்த துண்டால் சாவித்திரியை விளாசித் தள்ளுவார் .
சாவித்திரியை அடி வாங்கிய போது சாவித்திரி முகம் மற்றும் கண்ணங்கள் சிவந்து விட்டதாம். அந்தக் காலகட்டங்களில் காட்சி நன்றாக வர இது போன்ற சம்பவங்களை பெரிதாக நினைக்க மாட்டார்கள். அப்படி அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகர்கள் நடிகையர்கள் இருந்தார்கள் .ஆனால் இப்போதெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கவே முடியாது. 
3) சிவாஜி கணேசன்-சரோஜாதேவி இணைந்து நடித்த குலமகள் ராதை திரைப்படத்தின் இறுதி காட்சியில் சிவாஜி கணேசன் மருத்துவமனையில் அடிபட்டு இருக்கும் நிலையில் சரோஜாதேவி தன்னை நல்லவர் என்று நிருபிக்கும் உச்சகட்டமான காட்சியில் அதை ஏற்க மனமில்லாமல் கோபத்தால் சிவாஜி கணேசன் தனது காலால் வேகமாக சரோஜாதேவியை எட்டி உதைப்பது போல காட்சி படமாக்கப்பட இருந்தது. 
சிவாஜி உதைக்கும் போது முதலில் அந்த உதையானது சரோஜாதேவி வயிற்றில் உதைக்கபட்டு கீழே விழுந்து விட்டார். 
உடனே பதறிபோன சிவாஜி கணேசன் இயக்குனர் ஏ. பி. நாகராஜனிடம் மருத்துவரை கூப்பிடுங்கள் என்று கூறியவுடன். 
உடனே சரோஜாதேவி அவர்கள் சிரித்து கொண்டே சிவாஜி கணேசனை பார்த்து எனக்கு டாக்டர் வேண்டாம் என்றார் ஏன் உனக்கு வயிற்றில் வலிக்கவில்லையா என்று சிவாஜி கணேசன் மன பதற்றத்துடன் சரோஜாதேவி இடம் கேட்ட போது  என் வயிற்றில் விட்ட உதையானது இரண்டு ஒரு நாளாக என்னை சிரமபடுத்தி கொண்டிருந்த கேஸ்ட்ரபுலை போக்கிவிட்டது. என்று கிண்டலாகவும், மகிழ்ச்சியாகவும் கூறி கொண்டு சரோஜாதேவி அவர்கள் பெருந்தன்மையாக எனக்கு டாக்டர் வேண்டாம் டாக்டர் செய்ய வேண்டிய வேலையை தான் தற்போது சிவாஜி அவர்கள் விட்ட உதை என் கேஸ் ட்ரபுளை சரி செய்து விட்டது .எனக்கு எல்லாம் கியூர் ஆகிவிட்டது என்று சரோஜாதேவி கூறினார். 
அதன்பின்பு தோளில் உதைப்பது போல அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. 
பின்பு சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்கள் சரோஜாதேவியிடம் உதையின் வலியை கேட்ட போது பாரதியின் வயிற்றில் யானை மிதித்தார் போல் என்று கூறுவார்களே அதே போல் என்று சரோஜாதேவி கூற அதற்கு இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்கள் உண்மை தான் சிவாஜி கணேசன் இதில் கணேசன் என்றால் யானை ஆணைமுகன் என்று பொருள்படும். 
அதே போல் அபிநய சரஸ்வதி இதில் சரஸ்வதி என்றால் பாரதி என்று பொருள் இன்னும் தெளிவாக சொல்ல போனால் நடிகை சரோஜாதேவி அவர்கள் இந்தி திரைப்பட உலகில் அபிநய பாரதி என்று அழைக்கப்படுகிறார்கள் என்று ஏ. பி. நாகராஜன் திறம்பட விளக்கம் தெறிவித்தார். 
செந்தில்வேல் சிவராஜ்
 

 

Leave a Reply