• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புது முகமாக வந்த ரஜினிக்கு சிவாஜி காட்டிய கரிசனம் - கடைசிவரை ரஜினி மரியாதை செலுத்த அதுதான் காரணம்!

சினிமா

ரஜினிகாந்த் சிவாஜியுடன் இணைந்து நடித்த முதல் படம் நான் வாழ வைப்பேன். 1979-ம் ஆண்டு வெளியான இந்த படம் இந்தியில் வெளியான மஜ்பூர் என்ற படத்தின் ரீமேக்காக வெளியானது.

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசன். அதே போல் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த். இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை சிவாஜி கணேசனின் உண்மையான பெயர் வி.சி.கணேசன். அதேபோல் ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜி ராவ்.

க்ளாசிக் சினிமா தொடங்கி இன்றைய முன்னணி நடிகராக விஜய் வரை பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி கணேசன், ரஜினிகாந்துடன் இணைந்து சில படங்களில் நடித்திருந்தாலும், முதன் முதலில் ரஜினிகாந்த் சிவாஜியுடன் இணைந்து நடித்த படம் நான் வாழ வைப்பேன். 1979-ம் ஆண்டு வெளியான இந்த படம் இந்தியில் வெளியான மஜ்பூர் என்ற படத்தின் ரீமேக்காக வெளியானது.

நடிகை கே.ஆர்.விஜயா தயாரித்த இந்த படத்தில் அவரே நாயகியாக நடிக்க நாயகனாக சிவாஜி கணேசன் ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் யோகானந்த் யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ரஜினிகாந்தை நடிக்க வையுங்கள். அவர் நன்றாக பண்ணுவதாக கேள்விப்பட்டேன் என்று சிவாஜியே ரஜினிக்கு சிபாரிசு செய்துள்ளார்.

அதன்பிறகு படத்திற்குள் வந்த ரஜினிகாந்த் நடிப்பை பார்த்த சிவாஜி வியந்துள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படத்தை பார்த்துள்ளனர் இதில் கடைசி 20 நிமிடங்கள் வரும் ரஜினிகாந்தின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. படம் முடிந்து சிவாஜி காரில் ஏறும்போது, அவரிடம் பேசிய இயக்குனர் யோகானந்த், அண்ணே படத்தில் ஒரு 10 நிமிடம் கட் செய்துவிடலாமா என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட சிவாஜி ஏன் என்னாச்சி என்று கேட்க, படம் நல்ல வந்துருக்கு. ஆனா படம் இறுதியில் ரஜினிகாந்த் தான் ஹீரோ என்பது போல் வந்துவிட்டது. படம் முடிந்து வெளியில் வரும் ரசிகர்கள் ரஜினிகாந்த் தான் நாயகன் என்று பேசிக்கொள்வார்கள். அதனால் அவர் நடித்த 10 நிமிட காட்சிகளை கட் செய்துவிடலாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சிவாஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்ததை ஒரு அடி கூட கட் செய்யக்கூடாது. அவன் இப்போதான் வளர்ந்து வருகின்றான் நான் 30 வருஷமா நடிச்சிட்டு இருக்கேன் அவன் வளரட்டுமே. அவர்களுக்கு நாம் வழிவிடுவோம் என்று கூறியுள்ளார். சிவாஜியின் பேச்சை கேட்ட இயக்குனர் ஒரு அடி கூட கட் செய்யாமல் படத்தை வெளியிட படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்துக்கு பாராட்டுக்களையும் பெற்று கொடுத்தது.
 

Leave a Reply