• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பானுமதி பாராட்டைப் பெற்ற ஒரே தமிழ் நடிகை - ஆச்சி மனோரமா

சினிமா

இந்திய சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகை பானுமதி பாராட்டிய ஒரே நடிகை ஆச்சி மனோரமா.

இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்கில் நடித்துள்ளார். ஒரு மொழில் ஒரு நடிகர் நடித்த படத்தை ரீமேக் செய்யும்போது இந்த கேரக்டரில் நடித்தால் ஒரிஜினல் படத்தில் நடித்தவரை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் பானுமதி, அவரை போல் என்னால் நடிக்க முடியாது என்று ஒரு தமிழ் நடிகைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

1939-ம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பானுமதி அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ராஜமுக்தி, அபூர்வசகோதரர்கள், லைலா மஜ்னு, நல்லதம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பானுமதி, எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1954-ல் வெளியான சக்ரபாணி, 1975-ல் சிவக்குமார் பானுமதி நடிப்பில் வெளியான இப்படியும் ஒரு பெண் ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் பாடகியாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள பானுமதி, ஒருவர் சிறப்பாக நடித்திருந்தால் அடுத்த படத்தில் அவரை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் பானுமதி அவ்வளவு எளிதில் யாருக்கும் பாராட்டு தெரிவிக்க மாட்டார் என்பது சினிமாவில் பலரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட பானுமதி முதல்முறையாக ஒரு தமிழ் நடிகைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார், அவர் தான் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமா நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

நாயகியாக நடிக்கவில்லை என்றாலும் தனது காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்ற, மனோரமா கடந்த 1957-ம் ஆண்டு சிங்கள மொழியில் வெளியான சுகுமல்லி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மனோரமா நடிப்பில், ஏவிஎம் தயாரிப்பில், 1988-ம் ஆண்டு வெளியான படம் பாட்டி சொல்லை தட்டாதே. பாண்டியராஜன், ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக மனோரமா நடித்திருந்தார்.

காமெடி கலந்த குடும்ப படமாக வெளியான இந்த படத்தில் மனோரமாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்தை 1989-ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தெலுங்கில் ரீமேக் செய்தது. இதில் மனோரமா கேரக்டரில் நடிகை பானுமதி நடித்திருந்தார். தெலுங்கிலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது நான் இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர் மனோரமா கிரியேட் செய்த கேரக்டர். நான் என்னதான் முயற்சி செய்தாலும் நிச்சயமாக அவரை போல் என்னால் நடிக்க முடியாது. அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டாத பானுமதி நடிகை மனோரமாவுக்கு பாராட்டு தெரிவித்தது ஏ.வி.எம் சரவணனுக்கே ஆச்சரியத்தை கொடுத்த நிலையில், சில வருடங்கள் கழித்து இந்த பாராட்டுக்கு உரிய மனோரமாவிடம் இதை சொன்னபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
 

Leave a Reply