• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசன் மேடையில் வாலிக்கு அவமானம்- கடைசி நேரத்தில் கவியரசர் கொடுத்த ஸ்வீட் ஷாக்

சினிமா

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு அஸ்தான் கவிஞராக மாறியவர் தான் வாலி.

தமிழ் சினிமாவில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் கவிஞர் வாலி. தொடக்கத்தில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வெற்றிகளை குவித்தவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு அஸ்தான் கவிஞராக மாறியவர் தான் வாலி.

அதேபோல் பாடல் ஆசிரியராக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த கண்ணதாசன் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து சென்னையை காலி செய்துவிட்டு மதுரையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக புறப்பட்ட வாலிக்கு கண்ணதாசன் பாடல் தான் ஊன்றுகோலாக இருந்து அவரை மீண்டும் சினிமா வாய்ப்பு தேட தூண்டியது என்று சொல்லலாம். அதே சமயம் வாலி – கண்ணதாசன் இருவரும் பொதுமேடைகளில் பாடல்களை விமர்சித்துக்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் கண்ணதாசன் விழா மேடையில் வாலியை கண்ணதாசன் நண்பர் அவமானப்படுத்த, அந்த மேடையிலேயே கண்ணதாசன் பதிலடி கொடுத்துள்ளார். வாலி அனைத்து பாடல்களையும் எழுதிய கற்பகம் படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது, கவிஞர் கண்ணதாசனுக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது காங்கிரஸ் கட்சியில் கண்ணதாசன் இருந்ததால் தனது நெருங்கிய நண்பரான சின்ன அண்ணாமலையை விழாவுக்கு அழைத்து வருகிறார்

கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி வந்ததை பிடிக்காத சின்ன அண்ணாமலை அவ்வப்போது வாலியை விமர்சித்து வந்துள்ளார். அந்த வகையில் இந்த விழாவில் பங்கேற்ற சின்ன அண்ணாமலை, கண்ணதாசன் பாடல் எழுதினால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கண்ணதாசன் ஜெயிக்கிற குதிரை. சில சமயங்களில் சப்பை குதிரை கூட மூக்கை முன் காட்டி ஜெயித்துவிடும் என்று வாலியை கூறியுள்ளார். சின்ன அண்ணாமலையின் இந்த பேச்சு சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை புரிந்துகொண்ட கற்பகம் படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு குத்துவிளக்கை எடுத்து வாலிக்கு பரிசாக கொடுக்குமாறு கண்ணதாசனிடம் கொடுக்கிறார். அதன்பிறகு கற்பகம் படத்தில் இருந்து ஒரு பாடல் லைவ்வாக அந்த மேடையில் இசைக்கப்படுகிறது. இந்த பாடலை கேட்டு, கண்ணதாசன் வாலியின் வரிகளில் மெய்சிலிர்த்து போகிறார். இதன் மூலம் கண்ணதாசன் மனதில் வாலிக்கு நீங்காத ஒரு இடம் கிடைக்கிறது.

இறுதியாக மேடையில் பேசிய கவியரசர் கண்ணதாசன், என் நண்பர் சின்ன அண்ணாமலை தவறாக பேசிவிட்டார். வாலி சப்பை குதிரை, மூக்கை நீட்டி ஜெயித்துவிட்டார் என்று சொன்னார். ஆனால் அப்படி இல்லை வாலி உன்மையிலேயே பந்தைய குதிரை ஜெயிக்கிற குதிரை தான். திரைப்பட பாடல் எழுதுவதில் எனக்கு அடுத்து வாரிசு என்று இதுவரை நான் யாரையம் சொல்லவில்லை. ஆனால் இந்த மேடையில் சொல்கிறேன் வாலி தான் என் வாரிசு என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.

தேன்மொழி

Leave a Reply