• Welcome to TamilsGuide
செய்திகள் 1

 பூவரசம் பொழுது விழாவில் பெண் வேடமிட்டு நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது

கனடா

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பூவரசம் பொழுது விழாவில் பெண் வேடமிட்டு நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. "பூவரசன்" எனும் நாடகத்தை எழுதி, இயக்கி நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. மூன்றாவது முறையாக பெண் வேடமிட்டு நடித்திருக்கின்றேன். 
நாடகத்தின் கருப்பொருள்: 
தான் பிறந்த மண்ணை நினைந்துருகிக் கொண்டிருந்த‌ சுந்தரம், அதனைக் கட்டியெழுப்ப புங்குடுதீவு நோக்கி நிரந்தரமாக கனடாவிலிருந்து புறப்படுகின்றான். விரும்பாமல், மனைவி பார்வதியும் சேர்ந்து பயணிக்கிறாள் தன் கணவருக்காக. பத்து தலைவர்களையாவது அங்கு உருவாக்க துடியாய்த் துடிக்கிறான் சுந்தரம். மரங்களை நடுகின்றான்; வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கின்றான்; நிறைய சேவைகள் செய்கிறான். ஆனால் நிறைமாதக்கர்ப்பிணி வீதியில் தன் குழந்தையை பிரசவிக்கிறாள். துரதிஸ்டவசமாக பார்வதி மரணமடைகின்றாள். பொதுவாழ்வில் வெற்றிகண்ட சுந்தரம் சொந்த வாழ்வில் தோல்வியடைகின்றான். 

தன் குழந்தையை, ஆசிரியை ஒருவரிடம் தத்துக் கொடுத்துவிட்டு கனடா திரும்புகின்றான் சுந்தரம். அந்த பிள்ளைக்கு அந்த மண்ணில் பிறந்து களமாடி வீரமரணமடைந்த பாலசந்திரனின் பெயரைச்சூட்டி வளர்க்கிறார் ஆசிரியர். பாலச்சந்திரன் வளர்ந்து இலங்கையின் ஜனாதிபதியாகிறான். 2048 ஆம் ஆண்டு ரொரண்ரோவில் நடைபெறும்  பூவரசம் பொழுது 2048 விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகின்றான். நாடகம் முடிகின்றது. 
புங்குடுதீவிற்கு சேவை செய்த பெரியவர்களை ஞாபகப்படுத்தியும், அமைப்பு ரீதியாகவும் தனிமனிதர்களாகவும் புலம்பெயரிகள் புங்குடுதீவிற்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றியும் சொல்ல எத்தணித்து நாடகம் தன் தனித்துவத்தை இழந்தது. இருப்பினும் பலரது பாராட்டினையும் பெற்றுக் கொண்டது.  அனைவரும் நன்றாக நடித்து பாராட்டினைப் பெற்றுக்கொண்டார்கள்.
நன்றி,
அ.பகீரதன்
நன்றி: புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
நன்றி: புகைப்படங்கள் Gana Arumugam அண்ணா
 

 

Leave a Reply