• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எழுபதுகளின் நயன்தாரா... லதா

சினிமா

ராமநாதபுரம் சமஸ்தானம், நல்ல படிப்பு, நடனம் என்று அருமையான வாழ்க்கைதான் அவருக்கு. அந்த சமயத்தில், அப்படியொரு இடத்திலிருந்து சினிமா வாய்ப்பு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘நடிப்பா... வேண்டாமே... படிக்கணுமே...’ என்றிருந்தவரை, துரத்தித்துரத்தி வந்து மடியில் வந்து உட்கார்ந்தது அதிர்ஷ்டம். அப்படித்தான் நடிக்க வந்தார். அவர்... லதா! அப்படி அவரை நடிக்க அழைத்தவர்... எம்ஜிஆர்.

1973ல் எம். ஜி. ஆர். தயாரித்து டைரக்ட் செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் அறிமுகமானவர் லதா.

எம். ஜி. ஆருடன் 16 படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து உழைக்கும் கரங்கள், பல்லாண்டு வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், மீனவ நண்பன், நீதிக்கு தலைவணங்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நவரத்தினம், உரிமைக்குரல் என பதினாறு படங்களில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தார்.

தமிழ்,தெலுங்கு கன்னடம் மலையாளம் என . எல்லா தென்னிந்திய மொழிகளிலும் நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே படம் "சிவகாமியின் செல்வன்' .

சின்னத்திரை தொடர்களிலும் முத்திரை பதித்துள்ள இவர், சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது ,கலைமாமணி விருது ஆந்திர மாநில அரசின் நந்தி விருது பிலிம்பேர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த்துடன் "ஆயிரம் ஜென்மங்கள்', "சங்கர் சலீம் சைமன்' கமலுடன் "நீயா' " வருவான் வடிவேலன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்‌.

ஸ்ரீதரின் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில், அற்புதமான கேரக்டர் கிடைத்தது லதாவுக்கு. தன் முதிர்ந்த நடிப்பால் மனதை அள்ளினார். தொடர்ந்து ஜெய்கணேஷ், சிவகுமார் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். எழுபதுகளில் தொடங்கி எண்பதுகளின் தொடக்கம் வரை நடித்துக்கொண்டிருந்தவர், திருமணம், இல்லறம், சிங்கப்பூர் என செட்டிலானார்‌

இப்போது அதே எனர்ஜியுடன், உற்சாகத்துடன் சீரியல்களிலும் வலம் வந்துகொண்டிருக்கிறார் ‌‌

தொலைக் காட்சிக்காக இவர் முதன் முதலாக நடித்தது கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்' தொடர்ந்து ராதிகாவின் , "செல்வி', "அரசி' என்று பல மெகா சீரியல்களில் நடித்துள்ளார்.. 

Prashantha Kumar
 

Leave a Reply