• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவின் ஓர் சென்டிமென்ட்டை நொறுக்கிய ஒரு படம்! கேப்டன் பிரபாகரன்

சினிமா

கேப்டன் பிரபாகரன்,
தமிழ் சினிமாவின் ஓர் சென்டிமென்ட்டை நொறுக்கிய ஒரு படம்!
விநியோகஸ்தர்கள் வாங்க பயந்து தப்பு கணக்கு போட்ட படம்! வாங்க பார்ப்போம்!

பொதுவாகவே தமிழ் சினிமாவின் ஓர் சாபம் என்னவென்றால் உச்ச நடிகர்களின் நூறாவது படம் வெற்றி பெறாது! இதற்க்கு பல உதாரணங்கள் உண்டு!

அதே போல் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்தின் நூறாவது படமாக வெளிவருவதால் அந்த சமயத்தில் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஒரு சிறிய நெகட்டிவிட்டி இருந்தது!

டைரக்டர் ஆர்கே செல்வமணி   கமர்சியல் படங்களை எடுக்கும் டைரக்டர் என்ற கோணத்தில் படம் பார்க்கச் சென்ற முதல் நாள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி  தந்தது இப்படம்..

எனக்கு தெரிந்த ஒரு திரைப்படம் பார்க்கும் சீனியர் அப்போது என்னிடம் கூறியது, இது ஆர்கே செல்வமணி படம் போல இல்லை! வேறு கோணத்தில் வேறு விதத்தில் படம் இருக்கிறது! மிகப்பெரிய வெற்றி பெறும் என்று ஆரூடம் கூறினார்..

லியாகத் அலிகான் வசனம் பட்டாஸ்.. இளையராஜா இசையில் இரண்டு தூளான பாடல்கள்  உள்ளடக்கியது இந்த படம்!

முதல் காட்சியில் ரயிலை கொள்ளையடிக்க குதிரையில் துரத்தி வரும் அந்த காட்சி பூலான்தேவி  காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு காட்சி ஆகும்! படத்தில் வில்லனாக வீரபத்திரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகான் வாழ்ந்து காட்டி இருந்தார்! சரத்குமாரும் தன் பங்களிப்பில் தாக்கத்தை தந்தார்!

அக்காலகட்டத்தில் அனைத்து தியேட்டர்களிலும் கேப்டன் பிரபாகரன் பெட்டி நிரந்திரமாக இருக்கும்!

இரண்டு நாள் மூன்று நாள் கேப் கிடைக்கும்போதெல்லாம் கேப்டன் பிரபாகரன் படத்தை திரையிட்டு ஒரு குட்டி தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் தியேட்டர் உரிமையாளர்கள்!

இதற்கு நம் பிருந்தாவன் திரையரங்கும் விதிவிலக்கல்ல!

இப்படம் இன்னும் இந்த காலத்து இளைஞர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு இருக்க வேண்டிய படம், 
துரதிஷ்டவசமாக குறைந்த நபர்களே பார்க்கும் ராஜ் டிவிக்கு கேப்டன் பிரபாகரன் படம் விலைபோனது!

அதனால் இப்படத்தின் பெருமையை நீட்டி சொல்ல முடியாத அளவுக்கு சென்று விட்டது!

கேரளாவில் உள்ள  மூனாறில் தமிழக படப்பிடிப்புக்கு மிக கட்டுப்பாடு விதித்து வந்த அந்த காலகட்டத்தில் கேப்டன் பிரபாகரன் படக்குழு அங்கே ஷூட்டிங் நடத்தி நாம் இதுவரை கண்டிராத பல இடங்களில் அற்புதமான காட்சிகளை படமாக்கினர்!

மேலும் விஜயகாந்த் கிளைமாக்ஸில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் பட்டாசு விதம்!

திரு.விஜயகாந்துக்கு கேப்டன் என பெயர் பெற்று தந்த படம் என்ற அந்தஸ்து கேப்டன் பிரபாகரன் படத்திற்க்கு உண்டு! 

கிட்டத்தட்ட 30 வருடத்திற்க்கு முன்னால் வந்த படம்...முடிந்தால் டவுன்லோட் செய்து படத்தை பாருங்கள்!

புல்லரிக்கும்! இப்படத்தின் பிரம்மாண்டம் இன்றும்  நம்மை பிரமிக்க வைக்கும் !

Leave a Reply