• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிக்கலில் இருந்து தப்பிக்க மாற்றி அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் பாடல்

சினிமா

பொதுவாகவே எல்லாப் படங்களுக்கும் தணிக்கை உண்டு. அது பாடல்களுக்கும் உண்டு. அப்படி தணிக்கையில் சிக்காமல் வரிகளை மாற்றியதால் தப்பித்த பாடல் தான் இது. பார்ப்போமா…

1965ல் வெளியான படம் எங்க வீட்டுப் பிள்ளை. மாபெரும் வெற்றி பெற்ற படம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் கூட இந்தப் படத்தை 100 தடவைக்கும் மேலாகப் பார்த்துள்ளார். அந்தப் படத்தில் ஒரு சூப்பர்ஹிட் பாடல் ஒன்று உண்டு.

நான் ஆணையிட்டால் என்று தொடங்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. டிஎம்.சௌந்தரராஜன் பாடியுள்ளார். அந்தப் பாடலில் முதலில் நான் அரசனென்றால், என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார். இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன். ஒரு தலைவன் உண்டு. அவன் கொள்கை உண்டு என்று எல்லாம் எழுதப்பட்டதாம்.

அதன்பிறகு சென்சார் போர்டில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் என்று மாற்றப்பட்டது. மேலும் காக்கைகள் கூட்டம் என்றால் அது அந்த சமயம் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸைக் குறித்து விடும் என்பதால், இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றினார்களாம்.

ஒரு தலைவன் உண்டு என்றால் அது அப்போது கட்சி தலைவராக இருந்த அண்ணாவைக் குறிக்கும் என்பதால் ஒரு கடவுள் உண்டு என்று மாற்றினார்களாம். ஒரு கடவுள் உண்டு. அவன் கொள்கை உண்டு என்றும் மாற்றினார்களாம். அப்படித் தான் அந்தப் பாடல் வெளியாகி படத்தை சக்கை போடு போடச் செய்தது. இன்னும் எம்ஜிஆரின் கொள்கைப் பாடல் என்றாலே இதுதான் முதலாவதாக வந்து நிற்கிறது.

எம்ஜிஆர் பாடல் என்றாலே இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்காது. இன்னும் கிராமங்களில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடினால்.

Leave a Reply