• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை

கனடா

2024ம் ஆண்டை வரவேற்று ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை அபிசேகங்களில் காலை தொடக்கம் எண்ணிக்கையில் ஆயிரத்தைத் தாண்டி கலந்து கொண்ட  அடியார்கள்...

.இன்றைய புத்தாண்டு தினத்தில் 2024ம் ஆண்டை வரவேற்று ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை அபிசேகங்களில் காலை தொடக்கம் எண்ணிக்கையில் ஆயிரத்தைத் தாண்டி கலந்து கொண்ட  அடியார்களின் தேவைகளைக் கவனிக்கும் வகையில் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ விஜயக் குமாரக் குருக்கள் அவர்கள் தனது சக சிவாச்சாரியப் பெருமக்கள் சகிதம் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

இன்றை விசேட அபிசேகங்களிற்கான உபயகாரராக யோகநாதன் ஆசிரியர் குடும்பத்தினரும் அன்னதானத்திற்குரிய உபயகாரர்களாக செல்வா வெற்றிவேல் குடும்பத்தினரும் தங்கள் ஆதரவை வழங்கிய வண்ணம் ஆலயத்திற்கு வருகை தந்து விசேட வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு காலையில் விசேட நாதஸ்வர தவில் கச்சேரிகளும் பாடகர் அஜீஸ் சிவகுமாரனின் பக்திப் பாடல்களும் இடம்பெற்றன.
 

Leave a Reply