• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெற்றோர்களே உஷார்

இலங்கை

”சுவாச நோய்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி காய்ச்சல், கொரோனா, டெங்கு,  ஆகிய நோய்கள்  நாட்டில் அதிகளவில் பரவி வருவதாக” குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நாட்டில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக, சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அத்துடன் பாடசாலை விடுமுறை காலமென்பதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் குழந்தைகள், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரை அருந்துவதால்  வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றினால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து  வருகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”காய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவங்களை அணிவது அவசியமாகும், எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply