• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகம் செய்தவர். 

சினிமா

தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகம் செய்தவர். பிளாட்பார்ம் சாங்ஸ் என்று கொச்சையாக அழைப்பட்ட முறையை மாற்றியவர். இவரது இசையமைப்பில் உருவான பாடல்கள் பெரும்பாலும் துள்ளல் தன்மையோடு இருப்பதைக் காணலாம்.
1995 ஆம் ஆண்டு வெளிவந்த படம் "பாட்ஷா" இப்படத்திற்கு தேவா இமையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதியுள்ளார்.அனைத்து பாடல்களும் வெற்றிப்பாடல்கள். அதில் ஒருபாடல் தான் " நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் " என்ற பாடல். இப்பாடல் இல்லாமல் ஆயுதபூஜை இல்லை. அந்த அளவிற்கு ஆயுதபூஜையோடு ஒன்றிணைந்து விட்டது. மற்றொரு புறம் ஒவ்வொரு ஆட்டோக்காரர்களுக்கும் குடும்பப் பாடலாக அமைந்துள்ளது.
இப்பாடல் உருவான விதம் சுவாரசியமானது. ரஜினிகாந்த் அவர்களும் தேவா அவர்களும் பாடல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது 

"ஆட்டோ ஆட்டோ சூப்பர் ஆட்டோ" என்று இசையத்ததை தேவா கூற ரஜினிகாந்த் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். பிறகு மீண்டும் வேறு வரிகளைக் கூறுகிறார் தேவா " ஏ கப்பல் பாரு கப்பல் பாரு கப்பல் மேல டோரா பாரு டோரா கீழ ஆயா பாரு ஆயா கைல கொழந்த கொழந்த கையில பழத்தப்பாரு பழத்துக்குள்ள கொட்ட பாரு கொட்டைக்குள்ள புழுவ பாருடா " இதுதான் ஆட்டோக்காரன் பாடலுக்கு முந்தைய வரிகள். இந்த இசையைக் கேட்டவுடன் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பாக இருக்கிறதெனக்கூற பிறகு கவிப்பேரரசரால் எழுதப் பட்ட பாடல் வரிகள் தான் நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்ற வரிகள்.
இப்பாடலில் கவிஞர் அவர்கள் ஒரு ஆட்டோக்காரின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார். தான் பாடல் எழுதப் போகும் சூழலை அல்லது யாருக்கும் எழுதப் போகிறமோ அவர்களின் வாழ்வியலை உள்வாங்கி எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவர் கவிப்பேரரசர். அதனால் பாடல்கள் வெற்றி பெற்று மனதில் குடிகொள்கின்றன.
பல ஆட்டோக்களின் பின்னால் பிரசவத்திற்கு இலவசம் என்ற வாசகம் இருக்கும். இப்போது அவ்வளவாக இல்லை. மற்ற வாசகங்கள் இருக்கின்றன. முகவரி தெரியாமல் எங்காவது போனால் நாம் முதலில் விபரம் கேட்பது ஆட்டோக்காரர்களிடமாகத்தான் இருக்கும். இதைத்தான் கவிஞரும் 
"நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேன்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான் அட்ரஸ் இல்லாத் தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்".  என்கிறார்.
அவர்களின் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்து தான் அதை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் வைரமுத்து அவர்கள் 
"அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம் அளவு சாப்பாடு ஒரு நேரம்"
மக்கள் தொகையின் பெருக்கத்தின் விளைவைச் கவிஞர் இங்கே சுட்டுகிறார். 2023 லும் கூட பேருந்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழலாகத்தான் இருக்கிறது. 
"ஊரு பெருசாச்சு…
சனத்தொகை பெருத்தாச்சு…
பஸ்ஸ எதிர்பார்த்து பாதி வயசாச்சு"
சாலை ஓரங்களில் ஆட்டோக்கள் நின்று கொண்டிருக்கும் காட்சியை இங்கே கவிதையாக வடிக்கிறார் கவிப்பேரரசர்
"வாழ்க்கை பரபரக்கும் நேரத்திலே…
இருப்போம் சாலைகளின் ஓரத்தில…"
இறுதியாக ஆட்டோவை மூன்று சக்கரத்தேரு என்று உவமைப்படுத்துகிறார். 
சில ஆட்டோக்காரர்கள் திமிர் குணம் கொண்டவர்களாக இருப்பதையும் காண முடிகிறது. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆட்டோக்காரர்களை குறைகூறுவது நோக்கமல்ல.

பூபாலன் வைரமுத்து
 

Leave a Reply