• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வழமைக்கு மாறான கிறிஸ்மஸ் வானிலை

கனடா

கனடாவில் வழமைக்கு மாறான கிறிஸ்மஸ் வானிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழமையாக இந்தக் காலப் பகுதியில் நிலவும் கடும் குளிரான வானிலையிலிருந்து இம்முறை மாற்றம் பதிவாகியுள்ளது. ஒன்றாரியோவின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
  
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

பொதுவாக கனடாவில் வைற் கிறிஸ்மஸ் எனப்படும் பனிப்பொழிவுடனான வானிலை கிறிஸ்மஸ் காலத்தில் காணப்படும்.

எனினும், கிறின் கிறிஸ்மஸ் எனப்படும் பனிபபொழிவு குறைந்த கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடியுள்ளனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலப் பகுதியில் வழமையாக காணப்படுவதனை விடவும் கூடுதல் வெப்பநிலை காணப்பட்டாலும் எதிர்வரும் நாட்களில் கடும் குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

Leave a Reply