• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொதுவெளியில் மேலாடையின்றி உலாவிய பெண் அதிரடி கைது

பிரேசில் மொடல் ஒருவர் பொதுவெளியில் மேலாடை இன்றி நடமாடியதால் கைது செய்யப்பட்டார். பிரேசிலின் தெற்கு நகரமான Balneario Camboriuயில் கடற்கரைக்கு அருகில் பிகினி மொடலான கரோலின் வெர்னர் (Caroline Werner), தனது நாய்களுடன் நடந்து செல்லும்போது மேலாடையை கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டார்.
  
இதனால் உள்ளூர் பொலிஸார் அவரை கைது செய்தனர். அவர் ஓர் ஆண்டு காலம் சிறை தண்டனையை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை கைது செய்ததற்கு கரோலின் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேசிலின் அரசியலமைப்பு பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமாக பொருந்துமா? பொதுஇடங்களில் ஆண்கள் மார்பை வெளிக்காட்டிக்கொண்டு நடக்க அனுமதிக்கப்படுகின்றனர், பெண்கள் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆச்சரியமாக கேட்கிறார் 37 வயது கரோலின்.

மேலும் அவர், ''துரதிர்ஷ்டவசமாக எனது நாட்டில் பாலின சமத்துவத்தை அரசியலமைப்பு உறுதி செய்தாலும், நடைமுறையில் இது நடக்காது. சுதந்திரம் எனக்கு இருக்க முடியாது, இந்த அமைப்பு மற்றும் சட்டத்தின் அடக்குமுறை விளக்கத்தால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். இரு பாலினருக்கும் இயல்பானதாக இருக்க வேண்டியவை, அவர்களில் ஒருவருக்கு தன்னிச்சையான மற்றும் அடக்குமுறையான முறையில் மறுக்கப்படுகின்றன'' என தெரிவித்துள்ளார்.

அத்துடன், மற்ற நாடுகளில் இவ்வாறு தான் உலா வந்த நிலையில், தென் அமெரிக்க நாட்டில் அவ்வாறு செய்வதால் தான் சிக்கலில் சிக்கியதாக குறிப்பிட்டார்.

அதேபோல் கரோலினின் குடும்பத்தினருக்கோ அல்லது வழக்கறிஞருக்கோ தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள அனுமதிக்காததன் மூலம், காவல்துறை தனது நடைமுறை உரிமைகளை மீறியயதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தனது செயலுக்காக சம்மன் பெற்ற கரோலின் ஒரு மணிநேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 

Leave a Reply