• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வழமைக்குத் திரும்பாத கிளிநொச்சி

இலங்கை

நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் கிளிநொச்சி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மழை நின்றும் வெள்ளத்தின் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் மழை முடிந்தும் வெள்ள நீர் வடிந்து செல்லாத நிலையில் தற்பொழுதும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக சிலரது கிணறுகளில் வெள்ள நீர் மூடி பாய்ந்ததன் காரணமாக கிணறுகள் பகுதி அளவிலும் முற்று முழுதாகவும் அழிவுற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் பகுதியில் கால்நடை பண்ணை ஒன்றை நடாத்தி வரும் ஒருவர் 50க்கும் மேற்பட்ட கோழிகளும் ஐந்து ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தற்பொழுது வெள்ளநீர் வடிந்த பின் தொற்றுநோய் காரணமாக நான்கு ஆடுகள் இறந்துள்ளதாகவும், அதில் இரண்டு ஆடுகள் தற்பொழுது கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply