• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புர‌ட்சித்த‌லைவ‌ர் முத‌ல்வ‌ராக இருந்தபோது 1982ல் நான் ப‌டித்துக்கொண்டிருந்த திருச்சி செயின்ட் ஜோச‌ப் க‌ல்லூரிக்கு வ‌ந்திருந்தார்.

சினிமா

அங்கு க‌ல்லூரி மைதானத்தில் க‌ண்ண‌தாச‌ன் எழுதிய "இயேசு காவிய‌ம்" புத்த‌க‌த்தை வெளியிட்டு அரை மணி நேர‌ம் பேசினார்.
அப்போது தான் ஏசுநாத‌ர் ப‌ட‌த்தில் ந‌டிக்கவிருந்த‌தை குறிப்பிட்டு பேசினார். அந்த க‌தையில் ஒரு காட்சியில் ஏசு ச‌வுக்கினால் யூத‌ர்க‌ள் சில‌ரை அடிப்ப‌து போல் ஒரு காட்சி உண்டாம். அதைக் கேட்டு தான் அதிர்ச்சி அடைந்த‌தாக‌வும் அதைப்ப‌ற்றி சில கிருஸ்துவ பெரியோர்க‌ளிட‌ம் கேட்டு விளக்கம் பெற்ற‌தாக‌வும், அவை உண்மைதான் என்றும அவ‌ர்க‌ள் கூற‌வே ப‌ட‌த்தில் இந்த‌ காட்சியை வைத்துக்கொள்ளவும் எண்ணியிருந்தாராம். பின்ன‌ர் அந்த‌ ப‌ட‌த்திற்காக எடுக்க‌ப்ப‌ட்ட‌ சில புகைப்ப‌ட‌ங்க‌ளை கிருஸ்துவ‌ர்க‌ள் ப‌லரும், எம்ஜிஆர் ரசிக‌ர்க‌ள்  ப‌லரும் பூஜை அறையிலும், இல்லங்க‌ளிலும் ஏசுவாக‌வே க‌ருதி கும்பிடுவ‌தாக‌ த‌க‌வ‌ல் ப‌ர‌விய‌தும் அதிர்ச்சி அடைந்த‌தாக‌ கூறினார். பின் த‌யாரிப்பாள‌ர் தாமஸிட‌ம் அந்த‌ ப‌ட‌த்தில் தாம் ந‌டிக்க‌ இய‌லாது என வ‌ருத்த‌த்துட‌ன் கூறினார். பின் அதே த‌யாரிப்பாள‌ருக்கு  "த‌லைவ‌ன்" என்ற‌ ப‌ட‌த்தில் ந‌டித்துக் கொடுத்தார்.

க‌ண்ண‌தாச‌ன் எழுதிய இயேசு காவிய‌ம் புத்த‌க‌ம் திருச்சியை சேர்ந்த‌ க‌லைக்காவிரி என்ற‌ அமைப்பின‌ரின் வேண்டுகோளுக்கிண‌ங்க‌ க‌விதை வ‌டிவில் இயேசுவின் வாழ்க்க‌யில் ந‌ட‌ந்த‌ சில ச‌ம்ப‌வ‌ங்க‌ளை 400 ப‌க்க‌ங்க‌ளில் க‌ண்ணதாச‌ன் சுவைப‌ட எழுதியுள்ளார். இத‌ற்காக‌ திருச்சியில் சிலமாத‌ங்க‌ள் த‌ங்கி கிருஸ்துவ‌ பெரியோர்க‌ள் ப‌லரிட‌ம் விளக்கம் பெற்று எளிய க‌விதை வ‌டிவில் உருவாக்கினார். ஆனால், அவ‌ர் ம‌றைவிற்குப்பின் புர‌ட்சித்த‌லைவ‌ரால் ஜ‌ன‌வ‌ரி 16, 1982 ஆம் ஆண்டில் செயின்ட் ஜோச‌ப் க‌ல்லூரி மைதான‌த்தில் இப்புத்த‌க‌ம் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. 
பெரும் வ‌ர‌வேற்பை பெற்ற‌ இப்புத்த‌க‌ம் 10 லட்ச‌ம் பிர‌திக‌ளுக்கு மேல் விற்று சாத‌னை ப‌டைத்த‌து. 
அனைவ‌ருக்கும் இனிய‌ கிருஸ்தும‌ஸ் ந‌ல்வாழ்த்துக்க‌ள்..

Santhanam Admk

Leave a Reply