• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த தேதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை

2024ம் ஆண்டு பலன்கள்"

நீதிக்கும், நேர்மைக்கும், ஒழுங்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர் பெற்றது 8ம் எண் வரும் 2024 ன் கூட்டு எண்

ஏதாவது நல்லது நடந்துவிடுமா, எவ்வளவு முயற்சி செய்தாலும் எல்லா வேலைகளும் கடலுக்குள் எறிந்த கல்போ கிடக்கிறதே என்று புலம்பித்தவித்தவர்களு எல்லாம் இனிமேல் பொற்காலம்தான்.

8ம் எண் என்றாலே எட்டி நின்றவர்கள் எல்லாம் இந்த எண் காரர்களிடம் இனிமேல் ஒட்டிக் கொள்வர்கள்

மற்றைய என் காரர்களால் செய்யமுடியாது என்று ஒதுக்கி தள்ளிய பணிகளை எல்லாம் இவர்கள் நொடிப் பொழுதில்  செய்து வெற்றுக் கனியை தொடர்ந்து தக்க வைப்பதால் இவ்வளவு  நாட்கள் ஒதுக்கப்பட்ட  8ம் எண் காரர்கள் இனிமேல் எந்த நிகழ்விலும் உச்சத்திலிருப்பது உறுதி. 

-----------------------------------------------------------------------------

1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்கள் எதிலும் நிதானமாக செல்வது நல்லது, ஏற்கனகனவே எடுத்த காரியங்கள் மூலம் பலன்களை அடையலாம்,

அதேநேரம் இந்த ஆண்டு எடுத்துக்கொண்ட பணிகளுக்கு சக்சஸ் ரிசல்ட் அடுத்த ஆண்டு கிடைக்கும். குறிப்பாக எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதியுடேன் நடந்து கொண்டால் எந்த பின்னடைவும் இருக்காது A,I,J,Q,Y என்ற முத்ல் எழுத்தில் பெயர் அமைந்தவர்கள் இஷ்ட தெய்வங்களையும்,குல தெய்வங்களையும் இறுக்கப் பிடித்துக் கொண்டால் குதுகலம் நிச்சயம்.

-----------------------------------------------------------------------------

2,11,20,29 தேதிகளில் பிறந்த கழுவுற மீனில் நழுவுற மீன்களாகிய நீங்கள் எந்த எண்ணில் ஆண்டு வந்தாலும், அந்த எண்ணிற்கு சாதகமாக நடக்கும் வல்லமை கொண்ட உங்களுக்கு நடவடிக்கைக்கேற்ப நல்லதே நடக்கும்.

உடம்பல் நீர்சத்து அதிகரிக்கலாம், தாயாரின் நலன் காக்கப்படும், உணவு, குளிர்பாளம், ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றமான காலமாக தெரிகிறது, திருமணதடைகள் பலருக்கு அகலும் இதனால் மகிழ்வுறுவர், அன்பால் அடுத்தவாரை அடிமைப் படுத்துவதில் நீங்கள் மட்டுமேவல்லவர் எனலாம்.

இந்தஆண்டில் இரண்டு 2ம் எண் வருவதால் பெண்களால் பெருல் நன்மைகள் உண்டு உங்களுக்கு.


-----------------------------------------------------------------------------

3,12,21,30 தேதிகளில் பிறந்த பிரஸ்டீஜ் மன்னர்களகிய உங்களுக்கு எல்லாம் பாஸ்மார்க்கை தாண்டுவதால் பல இடங்களில் நீங்கள் தீர்வு சொல்லும் வாய்ப்பு வரலாம் இதன்மூலம் மேலும் மதிப்பு கூடலாம், பல விசங்களில் விடாப்பிடியாக இருப்பதை விட்டு விட்டு, கொஞ்சம் Flexibility ஆக இருங்க. இதனால் பிறரால் அதிகம் விரும்பப்படுவீர்கள் இரும்பு, டிராவல்ஸ், உணவகங்கள், ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்தது போல் அதிகமான வருமானத்தை குவிக்கலாம். நீதிதுறையில் இருப்பவர்கள் உச்ச பதவிகளை அடைவார்கள், கல்விதுறையினர் நினைத்தஇடத்திற்கு மாறுதல் பெறுவர்.

-----------------------------------------------------------------------------

4,13,22,31 தேதிகளில் பிறந்த நாட்டுப்பற்று மிகுந்த  நல்லவர்களே இந்த வருடம் மிக நன்றாகவே இருக்கு, நண்பர்கள் இவர்களுக்கு நிறைய, பகைமையை ஏற்பத்திக் கொண்டு ஓட்டம் பிடித்தவர்கள நிறைய, நிறைய, பேச்சை குறைங்க சேலம் சரியாகும்.

ஆசிரியர்கள், நீதிதுறையின்,ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், சினிமா, தொலைக்காட்சி துறையினர் தொட்டது எல்லாம், பட்டென முடிந்து மகிழ்வை தரும். 

நாடு விட்டு, நாடு சென்று பணத்தை குவிக்கும். வாய்ப்புகளை பெயரின் முதல் எழுத்தாக D,T,M என்ற எழுத்தை உடையவர்கள் பெறுவார்கள்.


-----------------------------------------------------------------------------

5, 14, 23 தேதிகளில் பிறந்த கலைகளில் நாயகனான உங்களுக்கு இணக்கமான எண்ணில் 2024 பிறப்பதால் அதிரடி அதிர்ஸ்டங்களை அள்ளிக்குவித்து, துள்ளித்திரியும் காலமாக அமையபோகிறது.

பேசியே பிறரை பவுடர் ஆக்கும் திறமை தங்களை தவிர வேறு யாருக்கும் வராது.

திவால் ஆன கம்பணிகளைக் கூட, தீர்க்கமான செய்ல்பாடுகள் மூலம் நிலை நிறுத்தும் வல்லமை ஏற்படும். ஆசிரியர்கள், வக்கில்கள், டிரேடில் செல்பவர்கள் மாபெரும் வாய்ப்புகளைப் பெற்று வருமானத்தை வருங்கால வைப்பு நிதியில் போட்டு பெருக்கிவிடலாம் புனிதப்பயணம், குதுகலப்பயணம் போன்றவைகளால் புள காங்கிதம் அடைவார்கள் . நினைப்பவை எல்லாம் பாசிட்டிவ் ஆகவே நடக்கப் போகுது உங்களுக்கு.

-----------------------------------------------------------------------------

6,15,24 தேதிகளில் பிறந்த அழகையும், அறிவையும் பெற்று 64 கலைகளையும் ஒருங்கே பெற்ற உலகியல் அறிஞர்களாகிய உங்களுக்கு இவ்வாண்டு முழுக்க வெகு சிறப்பான நிகழ்வுகளாகவே நடக்கும், தாய்,தந்தை யரை பாங்குடன் கவனித்துக கொள்வது நல்லது.

கற்று முடித்தவர்களுக்கு உயர்வான பல பதவிகள் வந்து மகிழ்வூட்டும்,, திரைப்பட துறையினர், தொலைக்காட்சி துறையினர், பத்திரிகையாளர்கள், கலைத்துறையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு இன்பகரமான ஆண்டாக அமைய போகிறது. 

காலத்தின் கட்டாயத்தால் ஆன்மீக விசயங்களில் அதிக நாட்டம் கொண்ட பலர் குடும்பு வாழ்க்கைக்கு திரும்பிவர வாய்ப்புகள் நிறைய தென்படுகிறது. இதனால் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகலாம்.

-----------------------------------------------------------------------------

7,16,25 தேதிகளில் பிறந்த ஞானக்குழந்தை நீங்கள் 

பிறர் மனதறிந்து அவர்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதில் வல்லவர்,

எல்லா விசயங்களிலும் சென்டிமென்ட் பார்ப்பதில் உங்களுக்கு விருப்பு, ஆனால் பல வெறுப்பு எனவே இடமறிந்து 'இம்ப்ளிமென்ட்' செய்யுங்க. 

2024ல் கடந்த காலத்தில் எடுத்த சதாரண (முயர்ச்சிகளுக்கு கூட அபரிமிதமான வெற்றிகளை ஆண்டின் எண்களில் இரண்டு 2 எண்கள் இருப்பதால் கொண்டு வந்து குவிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது முன்பு போல குழம்பிக் கொண்டே இருக்காமலும், அருகில் உள்ளவர்களை குழப்பாமலும் குறிப்பறிற்து குறிபார்த்து வெற்றிக் கணியை வீட்டிற்கு கொண்டு வந்து சேருங்கள், 7க் பக்கத்தில் 8, இனிமேல் தொட்டது. எல்லாம் பெஸ்ட் தான்.

-----------------------------------------------------------------------------

8,17,26 தேதிகளில் பிறந்த பிறரை வேலை வாங்கும்  திறமையார்களே, ஆழ்ந்த அறிவும், புத்தி சாலித்தனமும் கொண்டவர்களே, ஏற்ற, இறக்கங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களே, அசராமல் அந்ததடுத்த திட்டங்களை தீட்டிக் கொண்டிருப்பவர்களே, கடுமையாக உழைத்து எதுவும் எட்ட வில்லையே என ஏங்கிக்கொண்டு இருந்தவர்களே, அயராமல் உழைத்து இந்தா வந்து விடும் அந்தா வந்து விடும் என வெற்றிக்காக ஏங்கி காத்திருந்தவர்களே.

இந்த ஆண்டு கூட்டு எண் 8 வருவதால் இனிமேல் தான் இருக்கு உங்கள் அதிரடி ஆட்டமே, 

எடுத்து முடிக்காமல் இருந்த காரியங்கள் எல்லாம்  மட,மடவென நடந்து பொருளாதார உயர்வுகளை தொடர்ச்சியாக தர உள்ளது, சமூக அந்தஸ்து வெகுவாக உயர்போகிறது. அரசியல் வாதிகள் வழக்குகளில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவார்கள் super Good ஆண்டு.

-----------------------------------------------------------------------------


9,18,27 ம் குண்ணில் பிரந்த நவ சக்திகளை தன்னுள். அடக்கிய, நாட்டுப்பற்று மிகுந்த, தீமைகளை தீக்கரையாக்கும் நற்குணம் கொண்டவர்களே,

கம்பீர தோற்றம் கொண்டு பிறரை மிரட்டினாலும் கருணை உள்ளம் கொண்டவர்களே,

பலநேரங்களில் உணர்ச்சி வசப்பட்டாலும் உரிய நேரத்தில் உதவும் குணம் கொண்டவர்களே 

எல்லா வலிமையும் கொண்ட நீங்கள், அதிரடிகளை இவ்வாண்டு குறைந்துக் கொள்வதே சிறிப்பாகும்.

இரும்பு, கெமிகல், அந்தஸ்து ஓட்டல்கள் ஜவுளி, உணவு துறையினர் ஏற்றங்களைப் பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

பேச்சிலும், செயலிலும் நிதானம் நிச்சயமாக  தேவை, சட்ட சிக்கல்களில் இருந்து விடுபட இது தாரகமந்திரமாக இருக்கும்,

அமைதி, அமைதி, அடங்கு, அடங்கு, என ஆழ்மனதிற்க் கட்டனை இட்டு கடமைகளை செவ்வனே செய்தால், வெற்றிகளும்,மகிழ்ச்சியும் வீட்டிற்க்கே வந்துவிடும், மொத்ததில் நாவடக்கம் அவசியம் இவ்வண்டு,

"தீதும், நன்றும்" பிறர்தர வேண்டியதில்லை என்பதை உணர்ந்து செயல் படுவதே உத்தமம்.

Dr JNS.செல்வன் Phd., 
எண்கணித நிபுணர் 
காரைக்குடி
Cell: 98424 90001

-----------------------------------------------------------------------------

 

Leave a Reply