• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

இலங்கை

ஹப்புத்தளை – தியத்தலாவை ரயில் பாதையில் இன்று காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடரட மெனிக்கே ரயிலும், பொடி மெனிகே ரயிலும் இன்று காலதாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மண்சரிவினால் தடைப்பட்ட ரயில் பாதையில் மண் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply