• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமான கழிவறையில் இறால் சமைத்த யூடியூபர் - வலுக்கும் கண்டனம் 

சமீபத்தில் விமானம் ஒன்றின் கழிவறையில் நபர் ஒருவர் இறால் மீன்களை சமைக்கும் வீடியோ டிக் டாக்கில் வெளியாகி பலருக்கும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் barfly 7777 என்ற டிக்டாக் கணக்கில் இருந்து வெளியான வீடியோ ஒன்றில், நபர் ஒருவர் விமானத்தின் கழிவறையில் உள்ள வாஷ் பேசினில் இறால் மீன்களை போட்டு சமைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
  
டிக்டாக் செயலியில் “பாத் ரூம் சமையல்காரர்” என்ற தலைப்பில் பதிவேற்றப்பட்டுள்ள அந்த வீடியோவில், விமான நிலையம் சென்று சம்பந்தப்பட்ட நபர் விமானத்தில் ஏறியதுடன் தனது கையில் வைத்து இருந்த பையுடன் கழிவறைக்குள் நுழைவதை பார்க்க முடிகிறது.

பின் வாஷ் பேசனில் தண்ணீரை நிரப்பும் அந்த நபர், தான் கொண்டு வந்த பேட்டரி மூலம் தண்ணீரை கொதிக்க வைக்கிறார்.

அத்துடன் அதில் பையில் இருந்த இறால் மீன், பூண்டு, மசாலா ஆகியவற்றை போட்டு கொதிக்க வைத்து சமைக்கிறார். பின்னர் அதனை வடிகட்டி பேப்பர் பையில் போட்டு சாப்பிடுகிறார்.

இந்நிலையில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

அத்துடன் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. 
 

Leave a Reply