• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெப்பத்தால் வாடும் அவுஸ்திரேலியா - 35000 பேருக்கு மின் துண்டிப்பு 

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் மக்கைன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் தென் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மூண்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
  
அதேசமயம் இந்த நிலை வார இறுதிவரை தொடரலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது கடும் காற்று மின்னல் கடும் வெப்பம் காரணமாக தென் அவுஸ்திரேலியா கிழக்கு அவுஸ்திரேலியா வடமேற்கு அவுஸ்திரேலியா தென்கிழக்கு நியுசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடும் தீ ஆபத்துள்ளதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தென் அவுஸ்திரேலியாவில் வெப்பநிலை 47 செல்சியசாக காணப்பபடுகின்ற நிலையில் மாநிலத்தில் கட்டுப்படுத்தமுடியாத காட்டுதீ ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ள அதேவேளை, சில பகுதிகளில் வெப்பம் 47 செல்சியசாக காணப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் அவுஸ்திரேலியாவில் ஆபத்தான தீ நிலையை கட்டுப்படுத்துவதற்கான தீவிரமுயற்சிகள் இடம்பெற்றுவரும அதேவேளை 35000 பேருக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மோசமான காலநிலை காரணமாக 11000 பேர் மின்விநியோகத்தை இழந்துள்ளனர் மேலும் பாதுகாப்பு காரணங்களிற்காக13000 பேருக்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீ ஆபத்து அதிகரித்ததால் பல பகுதிகளில் மின்விநியோகத்தை துண்டிக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply