• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒலிம்பிக் கமிட்டி

2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடையை விதித்தனர்.
  
அத்துடன் பல்வேறு பொது மாநாட்டிற்கு ரஷ்யா அழைப்பு விடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது.

இந்நிலையில் 2024ம் ஆண்டு பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் அனுமதிக்கப்படாது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடுநிலை காரணமாக 2024ம் ஆண்டு பிரான்ஸின் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தன்னுடைய இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நடுநிலை தன்மையின் அடிப்படையில் ஒலிம்பிக்கில் ரஷ்யாவை அனுமதிக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவை தொடர்ந்து, 2024ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் இருந்து உக்ரைன் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை உக்ரைன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேட்வி பெட்னி தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply