• Welcome to TamilsGuide
செய்திகள் 1

100 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த தேசியப் பறவை

நியூசிலந்தில் 100 ஆண்டுகளில் முதல்முறையாகத் தலைநகரில் kiwi பறவைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேசியப் பறவையான kiwi வெல்லிங்டன் (Wellington) நகருக்கு ஓராண்டுக்கு முன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் Kiwi குஞ்சுகளின் வருகை தற்போது விலங்குப் பராமரிப்பாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேசமயம் இதனையடுத்து வட்டாரத்தில் kiwi பறவைகளின் எண்ணிக்கையைப் பெரும் அளவில் அதிகரிக்கத் திட்டமிடப்படுகிறது.

அத்துடன் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 200 பறவைகள் வட்டாரத்தில் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளை ஒருகாலத்தில் நியூசிலந்தில் சுமார் 12 மில்லியன் kiwi பறவைகள் இருந்த நிலையில் தற்போது 68,000 பறவைகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 

Leave a Reply