• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இனவெறுப்பு சர்ச்சையையும் மீறி இளவரசி கேட்டுக்கு கிடைத்த மரியாதை

கலப்பினப்பெண்ணான மேகனுக்குப் பிறந்ததால் இளவரசர் ஹரியின் மகனுடைய தோலின் நிறம் என்னவாக இருக்கும் என ராஜ குடும்ப உறுப்பினரில் ஒருவர் கேள்வி எழுப்பியதாக ஒரு சர்ச்சை எழுந்த நிலையில், மன்னர் சார்லசும், இளவரசி கேட்டும்தான் அப்படி கேள்வி எழுப்பியவர்கள் என ஒரு தகவல் வெளியாக, ஊடகங்கள் அதை தலைப்புச் செய்தியாக்கின.
  
இனி இளவரசி கேட் பாடு திண்டாட்டம்தான், மன்னராவது தனது வயது காரணமாக தப்பித்துக்கொள்வார். ஆனால், கேட் கடுமையாக பாதிக்கப்படுவார் என ராஜ குடும்ப நிபுணர்கள் ஊடகங்களில் எழுதினார்கள்.

ஆனால், அதையெல்லாம் பொய்யாக்குவதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் நேற்றிரவு கலந்துகொண்டார்கள்.

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ஊளையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள், அல்லது, பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இது மன்னர் சார்லசுக்கே நடந்துள்ளது.

ஆனால், இளவரசர் வில்லியமும் கேட்டும் அந்த நிகழ்ச்சிக்காக Royal Albert Hall என்னும் மண்டபத்துக்குள் வரும்போதே, கரவொலியும், விசில் சத்தமும் காதைப் பிளந்தன.

அத்துடன், அவர்கள் இருவரும் தங்களுக்கான இருக்கையை அடைந்ததும், மொத்த அரங்கமும் எழுந்து நின்று இளவரசர் வில்லியமுக்கும், இளவரசி கேட்டுக்கும் மரியாதை தெரிவித்த காட்சிகள் பிரித்தானிய ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன.

ஆக, மக்கள் இளவரசி கேட் மீதான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா, அல்லது அவர் அப்படி கூறியிருப்பார் என நம்பவில்லையா என்பது புரியவில்லை. எப்படியும், ராஜ குடும்ப நிபுணர்களின் கருத்து, இப்போதைக்காவது, தவறாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. 
 

Leave a Reply