• Welcome to TamilsGuide
செய்திகள் 1

13 லட்சத்து 20 ஆயிரம் பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு

ரஷ்யாவில் போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  
இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரஷ்ய ராணுவத்தில் கூடுதலாக 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை அணியில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்ய ராணுவத்தில் கூடுதலாக 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை பணியில் சேர்ப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கிரெம்ளின் உறுதிப் படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய கருத்தில், உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை மற்றும் நேட்டோ படைகளின் விரிவாக்கம் ஆகிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் இந்த ஆள் சேர்ப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேர்க்கப்படும் வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் படையில் சேர்க்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply