• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் இரு நிலை. காதலிப்பது...காதலிக்கப்படுவது

சினிமா

கமலை விட ஸ்ரீவித்யா ஒரு வயது மூத்தவர். ஸ்ரீவித்யா கர்நாடக சங்கீத பாடகி எம்.எல்.வசந்தகுமாரிக்கும், விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் இரண்டாவதாக பிறந்தவர்.

பிறந்த போதே அவருடைய குடும்பம் மிகப்பெரிய குடும்பமாக இருந்தது. ஸ்ரீவித்யா அம்மா, அப்பாவோடு பாட்டி லலிதாங்கி, லலிதாங்கியின் அப்பாவின் முதல் மனைவி குடும்பம், வசந்தகுமாரியின் சகோதர குடும்பம், குழந்தைகள் என பெரிய கூட்டு குடும்பம்.

குடும்பம் பெரிது. ஆனால் அதில் எம்.எல்.வி மட்டுமே உழைப்பவர். சம்பாதிப்பவர்.அவர் உழைப்பில் தான் குடும்பம் ஓடியது. 1950 கால கட்டத்தில் ஒரு பாடலுக்கு 5000 ரூபாய் வரை வாங்கினார். அம்மா ஸ்ரீவித்யாவை ஒரு பாடகியாக்க விரும்பினார். ஸ்ரீவித்யாவோ தன் பார்வையை வேறு பக்கம் பதித்திருந்தார். 11 வயதில் அரங்கேற்று நடனமாடி பல ஊர்களுக்கு நடன நிகழ்ச்சிகளுக்கு ஆடச்சென்ற ஸ்ரீவித்யாவுக்கு நடனத்தின் மேல் பயங்கரப்பிரியம். அதனால் நடிப்பின் மீதும் ஆசை ஏற்பட்டது.

நடிக்கத்தொடங்கி பாலச்சந்தர் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கமலஹாசனை பார்க்கும் முன்பே கமல் வீட்டுக்கு ஸ்ரீவித்யா செல்லும் பழக்கம் உண்டு. கமலின் தந்தை ஸ்ரீனிவாசனுக்கு ஸ்ரீவித்யாவை ரொம்பப்பிடிக்கும். கமல் குடும்பத்தார் ஸ்ரீவித்யா மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். நடனம் படித்த, அழகான, இசைக்குடும்பத்தை சேர்ந்த பிராமணப்பெண்ணை பிடிக்காமலிருக்குமா?

கமல் ஸ்ரீவித்யா அபூர்வராகங்கள் படத்தில் நடிக்கும் போதே அவர்கள் இருவருக்குள்ளும் காதல் அரும்பி இருந்தது. அந்த காதல் உண்மையாயிருந்ததாலோ என்னவோ படத்தில் கமல்-ஸ்ரீவித்யா காட்சிகளில் ரொமான்ஸ் நிரம்பி வழிந்தது. அது நடிப்பு என்றே தெரியாது.

படம் வெளியாகி ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது. காதல் அரசல் புரசலாக அல்ல ஓப்பனாகவே எல்லோராலும் பேசப்பட்டது. கமல் குடும்பத்தாருக்கு ஸ்ரீவித்யா மருமகளாக வரவேண்டும் என்கிற ஆசை இருந்ததால் எந்த எதிர்ப்பும் இல்லை.

அப்போது ஸ்ரீவித்யா வீட்டுச்சூழ்நிலை கொடூரமாக இருந்தது. எம்.எல்.விக்கு வாய்ப்புகள் இல்லை. கார் போன்றவற்றை விற்று தான் செலவுகளை பார்க்கும் நிலை வந்தது. தினமும் கிருஷ்ணமூர்த்திக்கும் எம்.எல்.விக்கும் சண்டை தான். 

அடையாறில் பெரிய வீட்டில் இருந்த ஸ்ரீவித்யாவை சந்திக்க கமல் வந்தார். திருமண விஷயம் பேச...

இருவரும் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் எம்.எல்.வி "எக்ஸ்கியூஸ் மீ" என்று உள்ளே வந்தார். நேராக கமலைப்பார்த்து "நீங்கள் நடித்த படம் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் வளர்ந்து பெரிய நடிகனாகி உயரம் தொட நிறைய வாய்ப்புகள் வர இருக்கிறது. இவளும் வளர்ந்து நல்ல நடிகையாக வேண்டும். பெரிய நாயகனாக வர வேண்டிய நீங்களும், நடிகையாக வளர வேண்டிய அவளும் இந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டால் இரண்டு பேர் வாழ்க்கையும் பாழாகி விடும். அதனால் குறைந்தது நான்கு வருடமாவது இருவரும் காத்திருக்க வேண்டும்."

இதைக்கேட்ட கமலுக்கு கோபம் தானாக வந்ததை அவர் முகமே காட்டிக்கொடுத்தது. அன்று கோபத்தோடு அந்த வீட்டை விட்டு வெளியேறினார் கமல். ஸ்ரீவித்யாவின் குடும்ப சூழலால் காதல் முளையிலேயேகிள்ளப்பட்டது.

சில வருடங்கள் கழித்து கமல் "மேல் நாட்டு மருமகள்" படத்தில் தன்னுடன் நடித்த நடிகை வாணி கணபதியை மணந்து கொண்டார். ஸ்ரீவித்யா மலையாளப்படங்களில் படுபிசியானார். தீக்கனல் என்கிற மலையாளப்படத்தின் தயாரிப்பாளர் ஜோர்ஜ் என்பவரை காதலித்து அம்மாவின் எதிர்ப்போடு மணந்து கொண்டார் வித்யா. காலம் அவரை விவாகரத்தாக்கி, திரும்பவும் நடிக்க வரவழைத்தது.

"புன்னகை மன்னன்' படத்தில் பத்தாண்டுகளுக்குப்பிறகு கமல் ஜோடியாக மீண்டும் ஸ்ரீவித்யா நடித்தார். அப்போது கமல் வாணியை விவாகரத்து செய்து சரிகாவை திருமணம் செய்து ஸ்ருதி பிறந்திருந்தார். அவர்கள் அதே நட்போடு பழகினர். 

ஸ்ரீவித்யா தன் 52வது வயதில் தன் அம்மாவுக்கு வந்த கேன்சர் தன்னையும் பிடித்துக்கொண்டதை உணர்ந்து கேரள மருத்துவமனையில் போய் சேர்ந்து கொண்டார். அழகான பொம்மையாக தன்னை போற்றும் ரசிகர்கள் முன் தன் நோயாளித்தோற்றத்தை வெளிப்படுத்த விரும்பாத ஸ்ரீவித்யா யாரையும் சந்திக்க விரும்பவில்லை. தன் சாவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் தன் இளமைக்காலத்தில் ஆசைப்பட்டு தோற்றுப்போன தன்னை புரிந்து கொண்ட கமலை சந்திக்க விரும்பினார். கமலும் கேரளா விரைந்து ஸ்ரீவித்யாவை சந்தித்தார்.

நிச்சயம் இரண்டு பேரின் நான்கு கண்களும் அருவியாய் கொட்டி இருக்க வேண்டும். அது தானே அன்பின் வெளிப்பாடு.

கடைசி காலத்தில் நோயென்கிற தீயில் விழுந்த வித்யா தன் பருவக்காலத்தில் தனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய ஆண்மகனை சந்தித்த திருப்தியோடு இந்த உலகுக்கு ஏதோ ஒன்றை இதன் மூலம் சொல்லாமல் சொல்லி மறைந்தார்.....

கமல் ஒரு டிரான்ஸ்ஜென்டர் என பாடகி சுசித்ரா சொன்னதில் எனக்கு நயமில்லை.  காதலின் குறிப்பாக அழகான பெண்களின் காதலின் உன்னதங்களை அனுபவித்த ஆண் கமல் ஒருவராகத்தான் இருக்கும்....

காதல் இரு நிலை. காதலிப்பது...காதலிக்கப்படுவது. ட்ரான்ஸ்ஜென்டர்கள் காதலிக்கப்படுவதில்லை....

Sampatth Kumar

Leave a Reply