• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

இலங்கை

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக் குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருந்ததை அடுத்து இது இடம்பெற்றுள்ளது.

இலங்கை தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டவர்கள் கிரிக்கெட் விளையாட்டை அழிக்க முயன்றதாகவும், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வதற்காக சிலர் பெரும் தொகையை முதலீடு செய்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரமோத்ய விக்ரமசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத ஆட்ட திசைமாற்றி மற்றும் சட்டவிரோத பந்தயம் தொடர்பான விடயங்கள் குறித்து தனக்கு தெரியும் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பாரதூரமானது என்று விளையாட்டு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அந்த அறிக்கை தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு விளையாட்டு தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
 

Leave a Reply