• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அர்ஜுனவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாது - எழுந்தது புதிய பிரச்சினை

இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபையைக் கலைத்து புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த இந்த தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தகைய குழுவொன்று நியமிக்கப்படுவைத்து குறித்தும் புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கு இவ்வாறானதொரு இடைக்கால குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் ஊடாகவே ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் முயற்சித்தும் இதுவரை அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்தி உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று திங்கட்கிழமை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply