• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அப்பாவி மக்களின் மரணத்தை மகிழ்ச்சிப்படுத்துவது பெருங்குற்றம் - ஜேர்மன் சேன்ஸலர்

இலங்கை

ஜேர்மனியில் யூதர்களைத் தாக்கும் எவரும் நம் அனைவரையும் தாக்குகிறார்கள் என சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து வரும் நிலையில், யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஜேர்மனியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் வலம் வருகின்றன. ஆனால், இந்த நிகழ்வுகளில் சிலவற்றை காவல்துறை தடை செய்துள்ளது.
  
இந்த நிலையில், செய்தித்தாளுக்கு சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் அளித்த நேர்காணலில், ஜேர்மனியில் யூதர்களைப் பாதுகாக்க அபரிமிதமான தைரியம் வேண்டும் என சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது நேர்காணலில், 'ஜேர்மனியில் யூதர்களைத் தாக்கும் எவரும் நம் அனைவரையும் தாக்குகிறார்கள். நாம் யூத விரோதத்தை ஏற்க மாட்டோம். தெளிவான சட்டங்கள் நம்மிடம் உள்ளன. இஸ்ரேலிய கொடிகளை எரிப்பது பெருங்குற்றம்; அப்பாவி மக்களின் மரணத்தை மகிழ்ச்சிப்படுத்துவது பெருங்குற்றம்; யூத எதிர்ப்பு கோஷங்களை எழுப்புவது பெருங்குற்றம்' என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வெறுப்பைத் தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் கைது செய்யப்பட்டவர்கள் மீது உள்ள பல்வேறு வழக்குகளை ஜேர்மன் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Leave a Reply