• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீடு 

சினிமா

தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் தான் லால் சலாம்.

இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

மொய்தீன் பாய் எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.

படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவித்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 2ம் வாரத்தில் நடக்கும் என கூறப்படுகிறது.  
 

Leave a Reply