• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கார்த்திக் சுப்புராஜ் 

சினிமா

தமிழ் திரையில் உச்ச நட்சத்திரமாக கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்தும் அவ்வப்போது சறுக்கலை சந்தித்து இருக்கிறார் . 
நடித்த படங்கள் எல்லாம் ஹிட் என்ற பயணத்தை சுமார் இருபது வருடங்கள் வரை வைத்திருந்த அவர் வெகுநாட்களுக்கு பின் ஒரு சோதனையை சந்தித்த தருணம் 
பாபா படத்தோல்வி அதன் பின் அதில் இருந்து மீண்டு வர சில காலம் பிடித்து 
பி வாசுவின் சந்திரமுகிதான் அதிலிருந்து மீட்டது அதன் பின்னர் சங்கர் படம் சிவாஜி, இந்திரன்  வெற்றி,  
குசேலன், கோச்சடையான், லிங்கா போன்றவை தோல்வி.( அன்றிலிருந்து இன்று வரை கே எஸ் ரவிகுமார் தமிழில் இயக்கவே இல்லை )  இடையில் ஜக்கு பாய் படம் எடுப்பதற்கு முன்பே கைவிடப்பட்டது  ரானா என்ற படம் எடுப்பதாக இருந்து கைவிடப்பட்டது . ( அவருக்கு உடல்நலம் இல்லாமல் போனது.)
இப்படி நிலையற்ற நிலையில் இருந்த அவர் பா ரஞ்சித் படங்களான கபாலி, காலா இரண்டு படங்கள் செய்து இருந்தார் இதன் விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். ரசிகர்களுக்கு பிடித்தபடம் மற்றும் வியாபார வெற்றி இரண்டும் இணைந்து வந்து வெகுநாள் ஆனது . 
இப்படிபட்ட நிலையில்தான், அவரது அடுத்த படத்தை இயக்க 
இளம் இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜுக்கு வாய்ப்பு அளித்தார். அந்த படம்தான்  பேட்ட வெகுநாள் கழித்து பழைய ரஜினிகாந்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது அனைவருக்கும் 
அதில் வயது வெகுவாக குறைந்து போனது போன்ற தோற்றத்தில்
அவரை காட்டி இருப்பார் இயக்குனர். பாடல்கள் மற்றும் நடிப்பு எல்லாம் ரசிகர்களுக்கு பரம திருப்தியை அளித்தது. 
இவர் அதிகம் படங்கள் இயக்கவில்லை. ஆனால் இயக்கப்படங்கள் எல்லாமே பேசப்பட்ட படங்களாக அமைந்தது 
காட்சிப்பிழை என்ற இவரது குறும் படம் கலைஞர் டிவி ,நாளைய இயக்குனர் போட்டியில் வென்றது அதன் பின்னர் திரைக்கு வந்த இவர் 
பீட்சா என்ற தனது முதல் படத்தை  இயக்கினார் விஜய் சேதுபதி நடிப்பு, இவரது கதை இயக்கத்தால் படம் த்ரில்லர் படம் . இறுதிக்காட்சி வரை சுவராசியமாக பார்க்க வைத்து  மிக புதுமையாகவும் சிறப்பாகவும் வந்து இருந்தது.தமிழ் திரைக்கு ஒரு திறமையான இளம் இயக்குனர் கிடைத்தார்.விஜய் சேதுபதி சில படங்கள் செய்து இருந்தாலும் இதன் பிறகுதான் பரவலாக தெரிய ஆரம்பித்தார் இந்த படம் பெயருக்கு தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது
அடுத்த படம் ஜிகிர்தண்டா  திரைத்துறையில் இயக்குனராக பரிமளிக்க வித்தியாமான கதையை தேடி வரும் சித்தார்த் மதுரை அருகே ஒரு ரவுடி தன்னை எதிர்த்து எழுதிய பத்திரிகையாளரை உயிரோடு எரித்து கொல்லும் அளவு மிகவும் கொடூரமானவான் என்று கேள்விப்பட்டு அவன் கதையை அவனுக்கு தெரியாமல் ரகசியமாக எடுத்து வெளியிடலாம் என்ற யோசனை செய்கிறான். 
ஆனால் இந்த முயற்சியின் போது அவனிடம் மாட்டி அவனை வைத்தே படம் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப் படுகிறான். 
பின்னர் அதிலிருந்து தன்னை எப்படி பாதுகாத்து கொள்கிறான் ரவுடியையும் டம்மி ஆக்குகிறான் என்பதுதான் மீதி கதை. 
புதுமையான களம். ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்த படமாக இருந்தது. இவரின் சிறந்த தோழன் பாபி சிம்ஹா இதில் மிக சிறப்பாக பண்ணியிருப்பார். இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது

மூன்றாவது படம் இறைவி   பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று கருத்து சொல்லும் படம்தான் என்றாலும் அதை அழுத்தமாக பதிவு செய்து இருப்பார். 
பெண்களிடம், ஆண்கள் தங்கள் மனக்குமுறலை கொட்டுகிறார்கள் ஒழிய அவர்கள் (பெண்கள்)மனதை மதிப்பதில்லை என்ற ஒற்றைவரி இந்தபடத்தின் கதைக்கு பொருந்தும். 
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , எஸ் ஜே சூர்யா ,கமலினி முகர்ஜி ,அஞ்சலி , வடிவுக்கரசி என ஒவ்வொரு கதாபாத்திரமும்  வஞ்சனை இல்லாமல் படத்துக்கு வலுவூட்டி இருக்கும். 
இதில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும் . குடிகாரனாக வந்து மிகச் சிறப்பாக தனது  உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார். வசனங்களும் நெஞ்சில் நிற்பவையாக இருக்கும் 
ஏன் நீங்கள் புதியகதை ஒன்றை செய்யகூடாது என்ற மனைவியை பார்த்து இவர் கேட்பார் "கருவில் இருக்கும் குழந்தையை அழித்து விட்டு புதிதாக ஒரு குழந்தையை பெற்றுகொள் என்றால்  உன்னால் முடியுமா? "என்று.  திரைத் துறையிலேயே அதிகம் பேர் இந்த படத்தை பாராட்டினர். 
அடுத்து மெர்குரி என்ற ஒரு சைலன்ஸ் திரில்லர் படத்தை செய்தார் விளம்பரங்கள் இல்லாததால் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை . 
அடுத்ததுதான் நாம் முதலில் பார்த்த பேட்ட . 
ஜகமே தந்திரம் தனுஷ் நடித்த படம் ஒரு லோக்கல் ரௌடி சர்வதேச கேங்ஸ்டர்களுக்கு உதவுவது போன்ற ஒரு கதை சுவாரசியமாக சொல்லி இருப்பார் நிறைய சண்டை ,நிறைய ரத்தம் அதன் பிறகு தான் செய்வது தவறு என்பதை உணர்ந்து மீண்டும் இங்கு வந்து வாழ்வதாக கதை வரும் மற்ற படங்களை காட்டிலும் இதில் ஏதோ ஒரு அம்சம் குறைவதாக எல்லாருக்கும் தோன்றியது 
இவர் புத்தம் புது காலை, நவரசா போன்ற வெப் சீரியல் அதில் வரும் ஆந்தாலஜி படங்களில் ஒன்றை செய்திருந்தார் 
நவரசாவில் அமைதி என்ற தலைப்பில் ஒரு செய்திருந்த படம் சிறப்பாக இருந்தது 
அதேபோல ட்ரிபிள் என்ற வெப்சீரிஸீயையும் மற்றும் பென்குயின் என்ற ஓ டிடி தளத்தில் வெளியான படத்தையும் தயாரித்து இருந்தார் 
மகான் படம் விக்ரமும் அவரது மகனும் நடிக்க இவருடைய இயக்கத்தில் ஓடிடியில் வெளியானது திரைக்கதையில் நிறைய குழப்பங்கள் இருந்தது அவர் நல்லவராகவே எப்பவும் இருக்க முடியாது என்று கூற வருகிறாரா அப்படி நல்லவர்களாக இருப்பதில் பலனில்லை என்று கூற வருகிறாரா என்று தெரியவில்லை 
காந்தியை நினைத்து பெயர் வைத்த ஒருவன் கடைசியில் மது சந்தையில் பெரிய அளவில் பெயர் எடுக்கிறான் என்று அது போன்ற ஒரு கதை அமைத்து யாராலும் ரசிக்கப்படவில்லை விக்ரமின் உழைப்பும் வீணானது
மிக இளம் இயக்குனர் என்பதால் இவரிடம் இருந்து தரமான படங்கள் இன்னும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Vedanthadesikan Mani Lion  
 

Leave a Reply