• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்டி மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு

இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனியுடனான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று இரவு 7.30 வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, புலத்கொஹபிடிய மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பனை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply