• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகரித்துள்ள தொழு நோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கை

கம்பஹா மாவட்டத்தில் தொழுநோயாளிகளை கண்டறியும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடம் சுமார் 130 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோய் நிபுணர் வைத்தியர் நிலங்கி சுபசேகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தொழுநோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்துள்ளமை தொடர்பில் மக்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென வைத்தியர் நிலங்கி சுபசேகர தெரிவித்துள்ளார்.

தொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் குணப்படுத்த முடியும் என்று கூறிய தொற்றுநோயியல் நிபுணர், தோல் உணர்வின்மை மற்றும் புண்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தோல் மருத்துவ மனை அல்லது தோல் மருத்துவரிடம் பரிந்துரைத்து தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது எலும்பை வழுவிலக்க செய்யும் என்றும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்றும் முறையான சிகிச்சையால் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார
 

Leave a Reply