• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்தநாள் திரைப்படம்.....

சினிமா

தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளைக் கணக்கெடுத்தால், அதிலே எஸ்.பாலசந்தரும் அடங்குவார். பின்னாட்களில், எஸ்.பாலசந்தர் ஒரு வீணை வித்துவானாகப் புகழ் அடைந்திருந்தாலும், அவ்ர் தன்னுடைய கலைப் பயணத்தைத் துவக்கியது திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும் தான். சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, அதற்குப் பின் சில திரைப்படங்களில், துணைப்பாத்திரங்களில் நடித்தார். ” பெண்' என்ற திரைப்படத்தில், நாயகன் ஜெமினிகணேசனுக்கு தோழனாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்திருந்தார். “என் கணவர், இது நிஜமா?. அவனா இவன், அவன் அமரன், நடு இரவில், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்கினார்.

இது நிஜமா என்ற திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார். [ கமலஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்]

திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது இதிரைப்படங்கள், மேனாட்டுக் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தாலும். அவற்றை, தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஒட்டி மாற்றி அமைத்துப் படங்கள் எடுத்தார். இவரின் படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், போலித்தனமான பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல தயாரிப்பு திறனுடன் கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.

பல படங்களை அவர் உருவாக்கியிருந்தாலும், அவர் இயக்கிய திரைப்படங்களில், அந்த நாள் மிக முக்கியமானது.

முதல் முறையாக, உலக திரைப்பட விழா, 1952ல், சென்னையில் நடந்தபோது திரைப்பட அரங்குகளிலும், தினமும் நான்கு காட்சிகள் என, பல மொழி படங்கள் திரையிடப்பட்டன. முதல் முறையாக உலக திரைப்பட விழா நடந்ததால், சென்னையில் நடந்ததால் அனைத்து தியேட்டர்களிலும், திரை உலகினர் அலை மோதினர். அந்த விழாவில் மிகவும் பேசப்பட்ட படங்களாக பைசைக்கிள் திவீஸ் என்ற இத்தாலி மொழி படம், ரஷோமான் மற்றும் யாகிவாரிஷோ ஆகிய ஜப்பான் மொழி படங்கள் இரண்டும் தான் இருந்தது

ரஷோமான் படம் , இந்திய திரை உலகமே வியந்து பாராட்டிய படமாகும். இதை இயக்கியவர், உலக அளவில் பேசப்பட்ட, 'அகிரா குரஸோவா...''

அந்த நாள் படமும் இந்த படத்தின் பாதிப்பில் உருவானது, வீணை எஸ்.பாலசந்தர். AV.மெய்யப்பச்செட்டியாரை பார்க்க வந்தார், ஏற்கனவே, பொம்மை மற்றும் கைதி திரைப்படங்களை இயக்கிவர். ரஷோமான் படத்தை, எஏ வி எம் , ஏற்கனவே ஜப்பானில் பார்த்திருந்தார், 'ரஷோமான் கதை பாணியிலேயே, நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால், ஏவி.எம்., பேனரில் எடுக்கலாம்...' என்றார், பாலசந்தர்.

கதையை கேட்டதும், ஏ வி எம்க்கும் பிடித்து போகவே, சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டு, சில நாட்களிலேயே, 1,000 அடி, 'பிலிம்'களில் காட்சிகளை எடுத்திருந்தார், பாலசந்தர்.

எப்போதுமே சில படங்களின் காட்சிகளை எடுத்த வரை போட்டு பார்த்து, அதில் ஏதாவது குறை இருந்தால், சரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தவர் ஏ வி எம்

தான் எடுத்த காட்சிகள் வரை போட்டு காட்டினார், பாலசந்தர். காட்சிகளை பார்த்தவர், 'நீங்கள் எடுத்த காட்சிகள் முழுவதையும் மீண்டும் படம் பிடிக்க வேண்டும். ஏனென்றால், என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, இப்போது பார்த்த காட்சிகளில் இல்லை. மேலும், நீங்கள் மிகவும் நம்பிய நடிகர், கல்கத்தா விஸ்வநாதனின் நடிப்பும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை...' என்றார், தந்தை.

'ஒரு சிறந்த வங்காள நடிகர். மேடையிலும், திரையிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உண்டு...' என்று வாதிட்டார், பாலசந்தர்.
(இவர்தான் பாலு மகேந்திராவின் மூடு பனி படத்தில் பிரதாப்போத்தனுக்கு மாமாவாக நடித்தவர்)

என் தந்தை யோசித்து சொல்வதாக கூறி, இரண்டு நாட்கள் கழித்து, 'சிவாஜி கணேசனை நாயகனாக போட்டு எடுங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் சொன்ன கதை போல, படம் நன்றாக அமையும்... மேலும், ஜாவர் சீதாராமனை வைத்து கதையில் சிறிய மாற்றத்தை செய்யுங்கள்...' என்றார்.

அவ்வாறே வேண்டிய மாற்றங்களை உடனே செய்து படமாக்கினார், பாலசந்தர். முதலில் அந்த படத்துக்கு, ஒருநாள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின், ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுத, சிவாஜிகணேசன் நடித்தபோது, அந்த நாள் என்று பெயர் சூட்டப்பட்டது.

அன்றைய சினிமாவில் பாடல்கள் இல்லாமல், திரைப்படம் எடுப்பது மிகவும் அரிது. பாடல்களே இல்லாமல் உருவான, அந்த நாள் ஒளி அமைப்பிலும், கேமரா நகர்வுகளிலும் புதிய பாதையை வகுத்தது. வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.

படத்தைப்பற்றி

அந்த நாள் திரைப்படத்தில், மொத்தப் படமும், இரண்டு துப்பறியும் இன்ஸ்பெக்டர்கள், நடந்த கொலையை விசாரிப்பதாகத்தான் அமைந்திருக்கும். அந்த விசாரணையின் போது, விசாரிக்கப் படும் ஒவ்வொருவர் மூலமாகவும், கதை மெல்ல மெல்ல அவிழும். கதை, முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும், குழப்பமே ஏற்படாது என்பது, திரைக்கதையின் அம்சமாகும. கதையின் பின்புலமும் சுவாரஸ்யமானது. இந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், எதிரி நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. வில்லன பாத்திரம் போல தோன்றினாலும் சிவாஜிகணேசன் மிகஅனயாசமாக நடித்திருந்தார் ஒரு க்ளாசிக் படம் என்றாலும், இத்திரைப்படம் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது.

சி.ஐ.டியாக வரும், ஜாவர் சீதாராமன், அழுத்தமான குரல் உச்சரிப்பு இந்த படத்திற்கு மிக பிளஸ் பாயிண்ட் என சொல்லாம் லாஜிக்காக வசனம் பேசி, துப்புத் துலக்குவது, பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள் நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது, சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம் `அந்த நாள்.' சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட `பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு' என்று மட்டும்தான் காட்டப்படும். மேலும், `அந்த நாள்'தான் நோயிர் (noir) என்று அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். 

இந்து தமிழ் திசை இதழில் இருந்து (hindutamil. in)

Leave a Reply