• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் லியோ படம் தற்போது பாக்ஸ் அபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ருபாய் வசூலித்து படம் சாதனை படைத்து இருக்கிறது. மேலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது என்பதால் லியோ பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லியோ பட தயாரிப்பாளர் விஜய் தன்னை இதுற்கு முன்பு ஒருமுறை போன் செய்து திட்டியதாக கூறி இருக்கிறார்.

விக்ரம் நடித்த மகான் படத்தை ஓடிடியில் வெளியிட்ட பிறகு, அதை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் லலித் குமாருக்கு போன் செய்து திட்டினாராம் விஜய்.

"இப்படி ஒரு படத்தை ஓடிடியில் ரிலீஸ் பண்ணிட்டியே. இது தியேட்டரில் வந்திருக்க வேண்டும்" என விஜய் கூறினாராம்.  
 

Leave a Reply