• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர் மற்றும் இசை கலைஞர்கள்

இலங்கை

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு இசை கலைஞர்கள் பலரும் யாழிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் (20-10-2023) சனிக்கிழமை இடம்பெற்றவுள்ளது.

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக தென்னிந்திய நடிகர் சித்தார்த் உட்பட இசை கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

இசை நிகழ்வானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply