• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம்..

உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஆஸ்டியோபோரோசிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும்.

உடல் அதிக எலும்பை இழக்கும் போது, மிகக் குறைந்த எலும்பை உற்பத்தி செய்யும் போது அல்லது இவை இரண்டுமே ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது. எலும்பு முறிவு ஏற்படும் வரை இது பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமே இருக்கும். எலும்பு முறிவுகள் பொதுவாக இடுப்பு, முதுகுத்தண்டு மற்றும் மணிக்கட்டில் ஏற்படும். ஆனால் இது உடலில் எந்த எலும்பும் பாதிக்கப்படலாம்.

இந்த நிலை வயதானவர்களில், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு மிகவும் பொதுவானது. ஏனென்றால், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது எலும்பு இழப்புக்கு இது வழி செய்கிறது.

இருப்பினும், ஆஸ்டியோபோரோசிஸின் குடும்ப வரலாறு, குறைந்த கால்சியம் உட்கொள்ளல், உட்கார்ந்த வாழ்க்கை முறை, புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் அல்லது சில மருந்துகளின் நீண்டகால பயன்பாடு போன்ற சில ஆபத்து காரணிகளைக் கொண்ட ஆண்கள் மற்றும் இளைய நபர்களையும் இது பாதிக்கலாம்.

எலும்பு முறிவு ஏற்படும் வரை இது பெரும்பாலும் அறிகுறி இல்லாமலே இருக்கும். ஆனால் ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பதைக் குறிக்கும் ஆரம்பகட்ட அறிகுறிகள் உள்ளன.

நாம் கவனிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸின் சில பொதுவான ஆரம்ப அறிகுறிகளாக எலும்பு முறிவு, உயரம் இழப்பு, முதுகு வலி, குனிந்த தோரணை, பலவீனமான மற்றும் உடையக்கூடிய நகங்கள், ஈறுகள் குறையும், பிடியின் வலிமை இழப்பு, குடும்ப வரலாற்றில் அடிக்கடி எலும்பு முறிவுகள், குறைந்த எலும்பு அடர்த்தி, ஹார்மோனில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த அறிகுறிகள் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இருப்பதை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவும்.

Leave a Reply