• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லியோ (2023)

சினிமா

கல்யாணம்னு ஒன்னு பண்றதுக்கு மூணு மாசம் முன்னாடி வயித்துக்குள்ள கண்டபடி பட்டாம்பூச்சி பறக்கும். கட்டுங்கடங்காத ஆர்வம் அலைபாயும். என்னென்னவோ எதிர்பார்ப்புகள் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது.. கல்யாணம் பண்ற அன்னைக்கு கூட சும்மா ஜிவு ஜிவுன்னு மனசு முழுக்க சந்தோஷமா இருக்கும். தொடர்ந்து அப்படியே மொத மூணு மாசம் சொர்க்கம் மாதிரி போகும்.. தேன் குடிச்ச நரி மாதிரி ஒரு மார்க்கமா அலைவோம். செம பீலிங் அது. அதுக்கப்புறம்தான் பிரச்சனை ஸ்டார்ட் ஆகும்... மண்டையே உடைச்சுக்குவோம்.. தலை முடியே பிச்சுக்குவோம்.. என்னடா கடைசியில இப்படி வந்து மாட்டிக்கிட்டோமேன்னு தோணும். கிட்டத்தட்ட லியோவிற்கும் அதுதான் நடந்திருக்கு.  படம் ரீலீஸ் ஆக ஒரு மாசம் முன்னாடி இருந்தே ஒரு பரபரப்பு பத்திக்கிச்சு... அப்படி இருக்குமோ..  இப்படி இருக்குமோன்னு... செம எதிர்பார்ப்பு. இன்னைக்கு ரீலீஸ் அன்னைக்கு கூட அப்படி ஒரு உற்சாகம். யாரும் படத்தை பத்தி.. முக்கியமான மொமெண்ட்ஸ் பத்தி சொல்றதுக்கு முன்னாடி நாமளே போய் பார்த்துடணும்னு அப்படி ஒரு ஆர்வம். அதுக்கு ஏத்த மாதிரியே 1st Half செம பிரமாதமா போச்சு. சும்மா பாத்து பாத்து செதுக்கினா மாதிரி அம்சமான மேக்கிங். அதிரி புதிரி இண்டெர்வெல். ஆஹா, 2nd half இன்னமும் தொம்சமா இருக்க போவுதுன்னு எப்பவும் வாங்குற ஸ்மால் சைஸ் பாப்கார்னுக்கு பதிலா லார்ஜ் ஒன்னு.. முட்ட பப்ஸ் ரெண்டுன்னு உள்ள போய் உக்காந்தா....
History of voilence க்கு ட்ரிபூயுட்ன்னு சொல்லித்தான் படத்தை ஆரம்பிக்கிறாங்க. உண்மையே சொல்லனும்னா செம அட்டகாசமாதான் படம் டேக் ஆப் ஆகுது. ஓணம் செலிப்ரேஷன்ஸ் நடந்துட்டிருக்கிற லேடிஸ் காலேஜூக்குள்ள நுழைஞ்ச மாதிரி கண்ணுக்கு  குளிர்ச்சியா அப்படியொரு விஷுவல்ஸ். இப்பவே மொத பஸ்ஸை புடிச்சு காஷ்மீர் போய்டணும்னு தோணுற மாதிரி அவ்வளவு அழகா ஒளிப்பதிவு செஞ்சிருக்கார் மனோஜ் பரஹாம்சா. 

ஒரிஜினலை விட பிரமாதமான காட்சியமைப்புகள்... குறிப்பா அந்த கொள்ளையடிக்கிற கேங்கோட கேரக்டர் ஸ்கெட்ச்... ஹீரோவும் அவங்களும் சந்திச்சுக்குற அந்த கஃபே காட்சி.. கொஞ்சம் கொஞ்சமா டென்ஷன் பில்டப் ஆகி சும்மா ஆயிரம் ஷாம்பெயின் வெடிச்சு தெறிக்கிற மாதிரியான அன்பறிவு மாஸ்டர்களோட ஆக் ஷன் பிளாக். தொடர்ந்து ஹீரோவை துரத்த ஆரம்பிக்கிற பிரச்சனைகள், ஹீரோ அவனோட மனைவி மற்றும் குழந்தைகள் மீதான lovable Bondingன்னு இதை எல்லாமே கன்வீன்சிங்கா சொல்ற லோகேஷின் திரைக்கதை... வெகு இயல்பான வசனங்கள் ன்னு ஒரு பிளாக் பஸ்டர் வெற்றிக்கான தகுதிகளோடத்தான் முதற் பாதி முடியுது. 
20 பாலில் செஞ்சுரி போட்ட பாட்ஸ்மேன் மாதிரி அதகளம் பண்ணியிருக்கிறார் விஜய்.. ஸ்டைலிஷ் உடல் மொழி.. ஆக்க்ஷன் காட்சிகளில் நாப்பது வயாக்ராவை முழுங்குன மாதிரி தீடீர்னு எந்திருக்கும் எனர்ஜின்னு செம மாஸ் பர்பார்மென்ஸ். கில்லி, போக்கிரி, துப்பாக்கி படங்களில் இருக்கிற மேனரிசத்தை ஆங்காங்கே தெளிக்கிற விஜயன்னா யூனிவர்ஸ் யுக்தியும் ரசிக்கிற மாதிரிதான் இருக்கு. திரிஷா ஆரம்பத்துல அடடா என்ன அழகுன்னு ஜொள்ள வச்சாலும் ஒரு கிளோஸ் அப் ஷாட்டுல, " ப்ப்ப்பா, யாருடா இது பேய் மாதிரி மேக்கப் போட்டுட்டுன்னு"   பயமுறுத்தவும் செஞ்சுடறாங்க.
ஒகே... இத்தோட விஜயன்னா அடி விழுதுகள்..  லோகேஷ் பக்தர்கள் எல்லோரும் உத்தரவு வாங்கிக்குங்க... மேற்கொண்டு படிச்சு உங்க மனசை நீங்களே நோக வச்சுக்காதீங்க.
ஒரு முட்டாள்... முட்டாள்தனமாதான் நடந்துக்குவான்... அதுல எந்த பெரிய ஆச்சரியமும் கிடையாது. ஆனா ஒரு IAS, IPS படிச்ச ஆசாமி முட்டாள்தனமா நடந்தா நமக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும். அதுவும் பர்ஸ்ட் half ல் டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணிட்டு.. செகண்ட் half ல் முட்டை முட்டையா போட்டுட்டு இருந்தா எவ்வளவு வெறியாகும்? ஷூட்டிங் நடுவுல அப்பப்ப கிரிக்கெட் விளையாடுவோம்னு லோகேஷ் சொல்லியிருந்தார். அப்போது மெடுல்லா ஆப்லாங்கெட்டாவில் அடி வாங்கி செகண்ட் ஹாஃப் முழுக்க கோமாவில் இருந்தது போலத்தான் இருக்கிறது அவரது இயக்கம். பிதாமகன் படத்தில், போலி சாமியாரை பார்த்து, "என்னடா உன் பிளாஷ்பேக்கை கேட்டா காறி துப்பற மாதிரி இருக்கு"  என்று சொல்லும் சூர்யாவை போலத்தான் நமக்கும் சொல்ல தோன்றுகிறது. சந்தேகமே இல்லாமல், லோகேஷின் very worst second half இந்த படம்தான். "சேது" விக்ரம்,  அபிதாவை பார்த்து சொல்ற மாதிரி, "உன்னை எல்லாம் எங்க வச்சுருக்கிறேன் தெரியுமா... நீ எல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆள்... மனசு வலிக்குது " ன்னு  லோகேஷை பார்த்தும் சொல்ல தோணுது. அதுவும் அனுராக் காஷ்யப் மீதெல்லாம் லோகேஷ்க்கு என்ன காண்டுனே தெரியல. வையாபுரிக்கு கொடுத்த ஸ்க்ரீன் space கூட அந்த மனுஷனுக்கு இல்லை. கடைசி கார் சேஸ், விஜய் ஆயிரம் கிலோ மீட்டர் தள்ளி இருந்துட்டு தன் குடும்பத்தை காப்பாத்தற சீன்ன்னு ஒன்னு ரெண்டு இடங்கள் மட்டுமே செகண்ட் half ல் saving areas. 
தலைநகரம் படத்துல, வடிவேலுவை தூக்கிட்டு போய்... நீ பில்லா தானே . நீ பில்லா தானே ..ஒத்துக்கோன்னு டார்ச்சர் பண்ற மாதிரி... நீ லியோ தானே... நீ லியோதானே ன்னு வர்றவன் போறவன் எல்லாம் நம்ம ஹீரோவை டார்ச்சர் பன்றாங்க... நம்மாள்,  படம் முடிய ரெண்டு நிமிஷம் வரைக்கும் நான் அவன் இல்லைன்னு பதிலுக்கு அவங்களை டார்ச்சர் பண்ணிட்டு " நான்தாண்டா லியோ " ன்னு end card போடும்போது பன்ச் வைக்கிறார். ட்விஸ்ட்டாம். மிடியல.
கடைசியில, " எப்போ பாரு லியோ... லியோ... லியோ...  இப்போ என்னாச்சுன்னு பாரு... தேவைதானா உனக்கு"  என விஜயன்னா வில்லனிடம் வசனம் பேசுவார். சத்தியமா..  படம் பார்க்கிற நம்மளை பார்த்து லோகேஷ் சொல்ற மாதிரிதான் எனக்கு தோணுச்சு. ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாதுன்னு நிரூபிச்ச இன்னொரு படம்.
First half ஒரு தடவைக்கு ரெண்டு மூணு தடவை கூட பார்த்துடலாம். ஆனா, second half.... அது நம்மளை நோக்கி வர்றதுக்குள்ள எங்கயாவது தப்பிச்சு ஓடிருங்க....

 

Manohar Shanmugam
 

Leave a Reply