• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் - சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை

இலங்கை

நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் துஷானி, ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் நாட்டில் பதிவாகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இதில் 125 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 7 ஆயிரம் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக விவசாயம் அதிகம் இடம்பெறும் மாவட்டங்களில் இந்நோய் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் துஷானி தெரிவித்துள்ளார்.

இந்த நோய் தாக்கத்திலிருந்து உயிரிழப்பைத் தடுக்க என்டி பயாடிக் மருந்துகளைப் பெறுவது அவசியம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு, விவசாயம் மற்றும் நெல் அறுவடை செய்பவர்கள் சுகாதார பரிந்துரைகளின்படி, இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் துஷானி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply