• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவில் மனித பேரழிவை தவிர்க்க போப் பிரான்சிஸ் கோரிக்கை 

காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கிறது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் மற்றும் நோன்பின் நாளாக அக்டோபர் 27ஆம் திகதியை அறிவிக்க முடிவு செய்துள்ளதாகவும், உலக அமைதியையே நோக்கமாக கொண்டிருக்கும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்குமாறும் போப் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், போர் எதிர்காலத்தை அழிக்கிறது. வெறுப்பையும், பழிவாங்கும் உணர்வையும் அதிகரிக்கிறது.

இந்த மோதலில் ஒரு பக்கத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு விசுவாசிகளை நான் அறிவுறுத்துகிறேன். அது சமாதானத்தின் பக்கம்.

அதை வார்த்தையின் மூலமாக இல்லாமல், பிரார்த்தனையின் மூலம் செய்யுங்கள். ஒரு மனிதாபிமான பேரழிவை தவிர்க்க தயவு செய்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். மோதல் விரிவடைவது கவலையளிக்கிறது.

ஆயுதங்கள் மவுனமாகட்டும். அமைதிக்கான முழக்கம் ஏழைகளிடமிருந்தும், மக்களிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும் கேட்கட்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply