• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவமனை மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது - பிரதமர் ட்ரூடோ

காசாவில் மருத்துவமனை மீதான தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடிய கூடாது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காசாவின் மருத்துவமனை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 500 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  
இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டதாக காசா சுகாதார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

ராக்கெட் தாக்குதல் ஒன்றின் மூலம் மருத்துவமனை பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அடைக்கலம் பெற்று இருந்தவர்களே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீன ஆயுததாரிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனவும் தவறுதலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் ஆரோக்கியமானவை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறு எனினும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 

Leave a Reply