• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாபெரும் சாதனையை படைக்கவிருக்கும் லியோ

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் முதல் நாள் Pre-Sales வசூல் விபரம் வெளியாகி இருக்கிறது. இதன்படி முதல் நாளில் மட்டும் 188 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது நடிகர் விஜயின் லியோ திரைப்படம். நாளை காலை தான் முதல் நாளின் முழு விபரம் தெரியவரும். ஆனால், இதுவரை 188 கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கிறது.
  
எனவே இதன் மூலம் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் முதல் நாளிலேயே நிச்சயமாக 200 கோடி என்ற இலக்கை எட்டும் என கணிக்க முடிகிறது படத்தை. முன் பதிவு செய்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி இருக்கிறது.

அதன்படி உலகம் முழுதும் 188 கோடி ரூபாய்க்கு லியோ படத்தின் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளனர். இன்றைய நாள் முடிவில் கண்டிப்பாக 200 கோடியை தாண்டி விடும் லியோ திரைப்படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் இதுவரை 106 கோடி வசூல் செய்திருக்கும் லியோ திரைப்படம் இந்தியா இல்லாத வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர்கள் அதாவது 82 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.

படத்தின் விமர்சனங்களை பொருத்து இந்த வசூல் இதே வேகத்தில் வசூல் தொடருமா..? என்பது தெரியவரும்.

நடிகர் விஜய்யின் திரை வரலாற்றிலேயே முதல் நாளிலேயே 200 கோடி வசூல் செய்த திரைப்படம் முதல் திரைப்படம் என லியோ சாதனை படைக்க இருக்கிறது முழு விவரங்களை விரைவில் பார்க்கலாம். 

Leave a Reply