• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பண வீக்கம் தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்

கனடா

கனடாவின் பண வீக்கம் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவின் பண வீக்கம் 3.8 வீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு இவ்வாறு பணவீக்க வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணம் வைக்க விகிதம் 4 வீதமாக காணப்பட்டது.

ஓராண்டுக்கு முன்னதாக கனடியர்கள் வீதமான கட்டணங்கள் செலுத்தியதனை விடவும் தற்பொழுது விலை குறைவடைந்துள்ளதாகவும் நீடித்துழைக்கக்கூடிய பாவனை பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கன்னடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

எவ்வாறு எனினும் கனடாவில் உணவுப் பொருட்கள் குறிப்பாக மளிகை பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரம் கனடிய மத்திய வங்கி வட்டி வீதம் தொடர்பில் அறிவிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply