• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான் ஹீரோ ஆனதே ஒரு வைராக்கியத்தில்தான்

சினிமா

நான் பாக்யராஜிடம் இயக்குனராக சேருவதற்காக அவர் வீட்டின் முன்பு தினமும் இருப்பேன். ஒரு நாள் அவர், "உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றால் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
நானும் சொன்னது போல் காத்திருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது.
அப்போதான் கடைசியா பாக்கியராஜ் சாரிடம் வாய்ப்பு கேட்கலாம், அவர் இல்லை என்று மறுத்தால் தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணத்தோடு அவரை சந்தித்து  என் நிலமையை பேசினேன். பாக்யராஜ் சார் உடனடியாக உதவி இயக்குனராக சேர்த்து கொண்டார்

நான் ஹீரோ ஆனதே ஒரு வைராக்கியத்தில்தான். 
ஒருமுறை நான், விஜயகாந்த் 
இன்னும் 3 பேர் ரயிலில் பயணம் செய்தோம். அப்போது ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற என் ஆசையை அவர்களிடம் கூறினேன். நான் அப்படி சொன்னதும் அந்த 3 பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கு அவமானமாக போனது. நான் கூனி குறுகுவதை பார்த்த விஜயகாந்தின் கண் சிவந்துவிட்டது. அவங்களை பார்வையாலேயே முறைத்து அவர்களை கண்டித்து அவனைப் பற்றி உங்களுக்கு
என்ன தெரியும். அவன் ஒரு சிறந்த
நடிகன் என்று கூறி என்னை அரவணைத்ததை என்னால் மறக்க இயலாது.
அந்த நிமிஷம் எனக்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்திலயாவது ஹீரோவாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அது சீக்கரமாகவே நடந்தது என் பாக்கியம் என்று நினைக்கிறேன்.
சுந்தர புருஷன், சொல்லமாலே ஆகிய 2 படங்களில்
ஹீரோவாக நடித்தேன். 2 படமுமே செம ஹிட். அதோடு, பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகனாக நடித்து நல்ல நடிகன் என்று பெயர் எடுத்துள்ளேன். 

 

லிவிங்ஸ்டன்!
 

Leave a Reply