• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்திரமுகியாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை

சினிமா

கடந்த 2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு இருந்தாலும், தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கதையை வடிவமைத்திருந்தார்.
  
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2ம் பாகம் 18 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ஹீரோ ரோலில் ராகவா லாரன்ஸ் நடிக்க சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும் முதல் பாகத்திற்கு கிடைத்த அளவிற்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கங்கனா அந்த கதாபாத்திரத்தில் செட் ஆகவில்லை என பல விமர்சனங்களும் வந்தது. இது ஒரு புறம் இருக்க சந்திரமுகி முதல் பாகம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, சந்திரமுகி முதல் பாகத்தில் நான் தான் சந்திரமுகியாக நடித்திருக்க வேண்டும் என கூறி வருத்தத்துடன் கூறியுள்ளார் சினேகா. ஆம், சந்திரமுகி முதல் பாகத்தில் நடிகை சினேகா முதன் முதலில் சந்திரமுகியாக நடிக்கவிருந்தாராம்.

ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பின் நடிகை ஜோதிகா சந்திரமுகியாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply