• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலின் உத்தரவை ரத்து செய்யுமாறு ஐ.நா கோரிக்கை

காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதி நோக்கி இடம்பெயரவேண்டும் என இஸ்ரேல் விடுத்துள்ள உத்தரவை இரத்துச்செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே பெரும் துன்பகரமானதாக காணப்படுகின்ற சூழ்நிலையானது பெரும் பேரழிவு நிலையாக மாறாலாம் என்பதால் இந்த உத்தரவை இஸ்ரேல் இரத்துச்செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
  
அதேவேளை காசாவில் இருந்து ஐக்கியநாடுகளின் அதிகாரிகள் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறவேண்டும் எனவும் இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை இன்று ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையில் கடந்த சனிக்கிழமை (7) முதல் போர் நடந்துவரும் நிலையில் காசாவில் தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்து 3600 இடங்களில் இஸ்ரேல் குண்டுகளை வீசி வான் தாக்குதல் தொடுத்தது.

இதற்காக சுமார் 6 ஆயிரம் சுற்றுக்கு வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸின் மூத்த தளபதிகள், சிலர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காசா கரையில் உள்ள ராணுவ நிலைகள், போர்க்கால அறைகள், ஆயுத உற்பத்தி கிடங்குகள், தீவிரவாதத் தலைவர்கள் பதுங்கியுள்ள இருப்பிடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பிரஸல்சில் 31 நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் ஹமாசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவா காலண்ட் நாஜி ஜெர்மனியில் யூதர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் இது 1943ம் ஆண்டு அல்ல 2023 ஆம் ஆண்டு என்றும் கூறினார். 
 

Leave a Reply