• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிஞ்சு குழந்தைகள், சிறார்களுடன் ஹமாஸ் படையினர் - வெளியான அதிர்ச்சி காணொளி

இஸ்ரேலிய பிஞ்சு குழந்தைகள் மற்றும் சிறார்களுடன் ஹமாஸ் படையினர் பதிவு செய்த காணொளி ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேல் மீதான கொடூர தாக்குதலுக்கு பின்னர் பணயக்கைதிகளாக்கப்பட்ட சிறார்கள் இவர்கள் என்றே நம்பப்படுகிறது. சனிக்கிழமை ஹமாஸ் படைகள் திடீரென்று பலமுனை தாக்குதலை முன்னெடுத்ததில், சுமார் 1,300 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
  
அத்துடன் ஆயுததாரிகளான ஹமாஸ் படையினர் சுமார் 150 இஸ்ரேலிய மக்களை கடத்தி சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர். அவர்களில் 13 பேர் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலிய வீரர்கள் சனிக்கிழமை முதல் தெற்கு நகரங்கள் மற்றும் கிப்புட்ஸ் விவசாய பகுதிகளை நாசம் செய்துள்ளனர். மட்டுமின்றி, 1,500 பயங்கரவாதிகளின் உடல்களையும், ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்ட ஏராளமான பொதுமக்களையும் கண்டெடுத்ததாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்திருந்தது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதியில் தரைவழி தாக்குதலுக்கு முன்பான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், காஸாவைச் சுற்றியுள்ள தெற்குப் பாலைவனப் பகுதிக்கு படைகள், டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் 300,000 பாதுகாப்புப் படையினரை தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.

ஹமாஸ் படைகள் 40 பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொன்றுள்ளதாக இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமானமற்ற பரப்புரை தற்போது வெறும் கட்டுக்கதை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேல் காஸா மீது தொடுத்த கண்மூடித்தனமான தாக்குதல்களில் இதுவரை 400 சிறார்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா குழு, சரியான நேரத்தில் போரில் ஹமாஸுடன் சேர முழுமையாக தயார் என்று கூறியதை அடுத்து, இஸ்ரேல் வடக்கில் இரண்டாவது முன்னணியை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுறது.

ஆனால் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவும் ஆயுதங்களும் அளித்துவரும் நிலையில், மற்ற பிராந்திய சக்திகள் இந்த போரில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். 
 

Leave a Reply