• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல ஷைலஜா 

சினிமா

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல ஷைலஜா @ S.P. ஷைலஜா அவர்கள் பாடும் நிலாவின் சகோதரி என்பது ஒரு பெருமைக்குரிய மணி மகுடமாக கொண்டிருந்தாலும் பின்னணி டப்பிங், நடன கலைஞர், நடிகை, பாடகி என்ற பன்முகங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். தனக்கு நடிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் இயக்குனர் கே.விஸ்வனாத் இவருடைய பரத நாட்டிய அரங்கேற்றத்தை கண்டு வியந்து சலங்கை ஒலியில் இவரை நடிக்க வைத்தார். தனக்கு நடிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் விஸ்வனாத் ஷைலஜாவின் அப்பாவிடம் பேசி அனுமதி வாங்கி சலங்கை ஒலி படத்தில் நடிக்க வைத்தது குறிப்பிடதக்கது. இதுவே இவரின் முதல் மற்றும் கடைசி படமாகவும் இருந்தது. அதே சமயம் இந்த படத்தில் வேதம் அனுவிலும் ஒரு, வான் போலே வண்ணம், நாத வினோதங்கள் என் மூன்று முத்தான பாடல்களையும் தமது அண்ணனான பாடும் நிலாவுடன் இணைந்து இந்த படத்தில் பாடினார்.

படத்தில் கே.விஸ்வனாத் நடிக்க வைத்ததை போல 1978ல் இவரின் இயக்கத்தில் வெளிவந்த சீத்தம்மாலட்சுமி என்ற தெலுங்கு படத்தில் சீதா என்ற கேரக்டரில் நடித்த படத்தின் நாயகியான தல்லூரி ராமேஸ்வரிக்காக முதன்முதலாக டப்பிங் குரல் கொடுத்தார். தொடர்ந்து  பல தெலுங்கு படங்களில் பின்னணி நாயகியர்களுக்காக இவரது குரல் ஒலித்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கில் 1983ல் வந்த வசந்த கோகிலா படத்தில் ஸ்ரீதேவிக்காகவும், குணா படத்தில் ரேகாவுக்காகவும், தெனாலியில் தேவயாணி என பல முன்னணி நாயகியருக்கான குரலும் இவருடையதே... தனது முதல் படமான சலங்கை ஒலியில்  துடுக்குதனம் கோபம் வேதனை சந்தோசம் என பல பரிமாணங்களையும் வெளிப்படுத்தி தன் இயல்பான நடிப்பை கொடுத்தவர் பின்னாளில் தெலுங்கு பட நடிகரான சுபலேக சுதாகரை மணம் முடித்தது குறிப்பிடதக்கது.

தமிழ் திரை உலகில் முதன் முதலாக இசை மேதை திரு.ஷ்யாம் அவர்களின் இசையில் மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் பாடும் நிலாவின் அற்புதமான பாடலான மழை தருமோ என் மேகம் பாடலில் அண்ணன் பாடிய அந்த பாடலுக்கு பின்னணியில் ஹம்மிங் கொடுத்தார். தமிழ் திரை உலகில் முதன் முதலாக முழு பாடலும் பாடியது இசைஞானி இசையில் பொன்னு ஊருக்கு புதுசு படத்தில் வரும் பாடலான “சோலைக்குயிலே”. தொடர்ந்து அதே படத்தில் இசைஞானியுடன் “சாமக்கோழி ஏ கூவுதம்மா” பாடலையும் பாடினார். இந்த படம் வெளியான 1979ல் அடுத்தடுத்து வந்த மலர்களில் ஆடும் (கல்யாண ராமன்), ஆயிரம் மலர்களே (நி.மா.பூக்கள்) தொடர்ந்து ஏதோ நினைவுகள் (அகல் விளக்கு) என அடிபொழியான பாடல்கள் அவருக்கு கிடைத்தது ஒரு அற்புதம் என்றே சொல்லலாம். இடையில் கங்கை அமரன் இசையில் ஆடிடும் ஓடமாய் (சு.இல்லாத சித்திரங்கள்) பாடலை தனது அண்ணன் பாடும் நிலாவுடன் இணைந்து பாடினார். மேலும் பூந்தளிர் படத்தில் வந்த “மனதில் என்ன” பாடல் மூலம் பாடும் நிலாவுடன் இணைந்து முதன்முதலாக இசைஞானி இசையில் பாடியது சிறப்புக்குறியது... 

ஆரம்பத்தில் பாட ஆரம்பித்த காலம் தொட்டு இரு வேறு ரசனை உணர்வுகளை பாடி நம்மை பரவசப்படுத்தியவர் திருமதி.ஷைலஜா... உதாரணமாக “ஆசைய காத்துல தூது விட்டு” என்று நம்மை குத்தாட்டம் போட்டு குதூகலிக்க வைத்தவர் அதே குரலில் “ராசாவே உன்னை நான் எண்ணி தான்” என பாடி நம் மனதை சோகம் கொண்டு துயரப்படுத்தினார். அதே போல இசைஞானியுடன் குரலில் இணைந்து “சாமக்கோழி ஏ கூவுதம்மா” என காதல் ரசம் சொட்ட வைத்தவர் “ரசிகனே என் அருகில் வா” என துள்ளலையும் கொடுத்தார். இவரின் ஆகச் சிறந்த ஒரு சிறப்பாக ஜெயலலிதா நடிப்பில் கடைசியாக வந்த நதியைத் தேடி வந்த கடல் படத்தில் ஜெயச்சந்திரனுடன் “தவிக்குது தயங்குது ஒரு மனது” சுசிலாமாவுடன் “வராத காலங்கள் வந்த” பாடல்களுடன் தனித்து இவர் பாடிய “பூந்தோட்டம் பூவில்” பாடல் என அந்த ஆல்பத்தில் மூன்று பாடல் பாடி பெருமை சேர்த்தார்.

நடிப்பில் இயல்பையும் டப்பிங்கில் பல நாயகியரின் குரலை அழகாக்கியும், தனது குரலால் பல பரவச பாடல்களையும் அள்ளி கொடுத்த 

Kannan Natarajan

Leave a Reply