• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேகமாக பரவி வரும் கண் நோய் - மீண்டும் ஒரு பாடசாலைக்கு பூட்டு

இலங்கை

கண் நோய் பரவி வருவதால் யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கண் நோயை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அந்த வகுப்பறையில் உள்ள 13 மாணவர்களுக்கு கண் நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்கவும், மற்ற குழந்தைகளின் உடல் நலம் காக்கவும் விடுமுறை அளிக்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு நகரை அண்மித்த பல பிரதேசங்களில் சிறார்களுக்குள் பரவும் கண் நோயொன்று இந்த நாட்களில் பதிவாகி வருகின்ற போதிலும், அது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நோய் அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply