• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புஷ்பக 27 ஈழத்து திரைத்துறையில் ஓர் பாய்ச்சல்.. 

சினிமா

புஷ்பக 27 ஈழத்து திரைத்துறையில் ஓர் பாய்ச்சல்.. சைவத்தமிழ் மாமன்னான இராவணனை திரையில் கொண்டு வந்து மிகுந்த பாராட்டுதலுக்குரியது.. அறிவியல் தொழில்நுட்ப  படத்தில் நல்ல தமிழ் சொல்லாட்சி..  போர்கால நினைவுகளை தியாகங்களை மீட்க வைக்கும் பல காட்சியமைப்புக்கள் அருமை. 

தமிழரின் தொன்மத்தை தேடும் படத்தில் அந்நியர் தந்த அடையாளங்களை உணர்வுபூர்வமான காட்சிகளில் திரும்ப திரும்ப குறியீடாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம் நிறைவுப்பகுதியையும் இன்னும் செம்மைப்படுத்தி இருக்கலாம்

மொத்த்தில் குறைந்த வளங்களுடன் முழுநீள தாயகத்து திரைப்படத்தை தந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான காரை சிவநேசனை அருமையான ஒரு திரைப்படத்தை தமிழரின் தொன்மத்தை தேடும் உணர்வு புரிதலோடு பேசாப்பொருட்களை மீட்டுப்பார்க்க வைத்துள்ளது அவரை  தமிழர்கள் அனைவரது போற்றுக்குரியவராக்கியுள்ளது

சிற்சில குறைகள் இருந்தாலும் அவரின் முத்தான முதற் பிரசவம் தமிழரை பெருமித்தோடு பூரிக்க வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

சிவ நந்தி

Leave a Reply